Asianet News TamilAsianet News Tamil

#BREAKING அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் ராஜினாமா... பெருபான்மையை இழந்த நாராயணசாமி அரசு..!

புதுச்சேரியில் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் ராஜினாமா செய்திருந்த நிலையில் தற்போது காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஜான்குமார் ராஜினாமா செய்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Congress mla  john kumar resigns
Author
Pondicherry, First Published Feb 16, 2021, 10:52 AM IST

புதுச்சேரியில் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் ராஜினாமா செய்திருந்த நிலையில் தற்போது காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஜான்குமார் ராஜினாமா செய்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் 2-வது அமைச்சராக இருந்தவர் நமச்சிவாயம். நாராயணசாமி மீதான அதிருப்தியால் நமச்சிவாயம் தனது அமைச்சர், எம்எல்ஏ பதவியை  ராஜினாமா செய்துவிட்டு டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். 

Congress mla  john kumar resigns

ஆனால், அவரது பதவி விலகலால் காங்கிரஸ் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் நேராது என்று முதல்வர் நாராயணசாமி கூறியிருந்தார். இதனை தொடர்ந்து தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். 

Congress mla  john kumar resigns

இந்நிலையில், புதுச்சேரியில் காமராஜர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். சபாநாயகர் சிவக்கொழுந்து வீட்டுக்கு சென்று ராஜினாமா கடிதத்தை ஜான்குமார் தந்துள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் புதுச்சேரியில் இதுவரை 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். ஆகையால், புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios