congress mla death by accident



கர்நாடகத்தில் கடந்த இருவராங்களுக்கு முன் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது.

தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட ராஜராஜேஸ்வரி தொகுதியில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. நைமா கவுடா கர்நாடாகவின் ஜம்காந்தி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.   அவரது கார் கோவா –பகல்கோட் சாலையில் சென்று கொண்டிருந்தபோது துளசிகிரி என்ற இடம் அருகே கார் விபத்துக்குள்ளானது.

பதவியேற்று  ஒருவாரம் கூட ஆகாத நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ நைமா கவுடா இந்த சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இன்னும் அமைச்சரவையில் காங்கிரஸ்க்கும்   மஜதவுக்கும் இழுபறியில் உள்ள நிலையில், இச்சம்பவம் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.