Asianet News TamilAsianet News Tamil

தேர்தல் அறிக்கையில் படிப்படியா மதுவிலக்குன்னு சொன்னீங்களே.. அந்த வாய்ப்பு விடலாமா..? கே.எஸ். அழகிரி சுருக்!

 டாஸ்மாக் கடைகள் மூலம் வருகிற 36 ஆயிரம் கோடி வருமானத்திற்காக லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அழித்துக்கொண்டிருக்கும் டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கும் முடிவை கைவிட்டு முழுமையான மதுவிலக்கை அமுல்படுத்தி தமிழ் சமுதாயத்தின் மனிதவளத்தை காப்பாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

Congress leader K.S.Alagiri question to Tamil Nadu Government
Author
Chennai, First Published May 5, 2020, 8:31 PM IST

தமிழக அரசுக்கு மக்கள் நலனில் உண்மையிலேயே அக்கறை இருந்தால் அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி முழுமையாகவோ படிப்படியாகவோ மதுவிலக்கு கொண்டுவருவதற்கு மிகப்பெரிய அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

Congress leader K.S.Alagiri question to Tamil Nadu Government
இதுதொடர்பாக கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 40 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருக்கிற டாஸ்மாக் கடைகள் மே 7ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழக அரசுக்கு மக்கள் நலனில் உண்மையிலேயே அக்கறை இருந்தால் அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி முழுமையாகவோ படிப்படியாகவோ மதுவிலக்கு கொண்டுவருவதற்கு மிகப்பெரிய அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி டாஸ்மாக் கடைகளை நிரந்தமாக மூடி, மது இல்லாத தமிழகத்தை உருவாக்கினால் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி, வாழ தகுதியற்றவர்களாக உள்ள ஒரு கோடி மக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும்.Congress leader K.S.Alagiri question to Tamil Nadu Government
எனவே, டாஸ்மாக் கடைகள் மூலம் வருகிற 36 ஆயிரம் கோடி வருமானத்திற்காக லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அழித்துக்கொண்டிருக்கும் டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கும் முடிவை கைவிட்டு முழுமையான மதுவிலக்கை அமுல்படுத்தி தமிழ் சமுதாயத்தின் மனிதவளத்தை காப்பாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்." என்று அறிக்கையில் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios