குடியுரிமை திருத்த சட்டத்தால் (சிஏஏ) யாருக்கும் பாதிப்பு இல்லை என யார் சொன்னாலும் அது பெரிய தவறு என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்துவருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை என யார் சொன்னாலும் அது பெரிய தவறு.  சிஏஏவை ஆதரிக்க வேண்டுமென்றால், நீட் தேர்வை ரத்து செய்யுங்கள் என்று மத்திய அரசௌ அதிமுக அரசு கேட்டிருக்கலாம். 
ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை, உதய் மின் திட்டம் என தமிழக நலன்களைப் பாதிக்கும் திட்டங்களை தமிழக அரசு தொடர்ந்து ஆதரித்துவருகிறது.  ரயில்வே, தபால் துறை தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏராளமான தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை” என்று தெரிவித்தார்.