Asianet News TamilAsianet News Tamil

அம்பேத்கர் சிலை சேதம்..! வன்முறையை கட்டவிழ்த்து விட திட்டம்.? இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்- காங்கிரஸ்

அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

Congress insists that strict action should be taken against those who damaged the statue of Ambedkar
Author
First Published Jan 2, 2023, 2:16 PM IST

அம்பேத்கர் சிலை சேதம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே நெடுவரம்பாக்கம் கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையின் முகம், கையை மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சிலையை சேதப்படுத்திய மர்மநபர்கள் குறித்து சோழவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் அம்பேத்கர் சிலை சேதம் செய்யப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர்  மாவட்டம் பொன்னேரி அருகே நெடுவரம்பாக்கம் கிராமத்தில் சட்டமேதை அம்பேத்கர் அவர்களின் சிலையை சமூகவிரோதிகள் சிலர் சேதப்படுத்தியுள்ள செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

பெண் காவலருக்கு திமுக நிர்வாகி பாலியல் தொல்லை.! ஸ்டாலின் ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறி- இபிஎஸ்

Congress insists that strict action should be taken against those who damaged the statue of Ambedkar

காங்கிரஸ் கண்டனம்

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கொள்கைளையும், சித்தாந்தங்களையும்  முழுமையாக உள்வாங்கி கொள்ளாத சமூகவிரோதிகளின் இழிவான செயலாகத்தான் இதைப் நான் பார்க்கிறேன். எனது கடும் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.புதுக்கோட்டை மாவட்டத்தைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் எடுத்தவாய் நத்தம் கிராமத்தில் பல நூற்றாண்டுகாலமாக பட்டியிலின மக்கள் வழிபட முடியாத நிலையில் தற்போது அந்த பகுதியிலும் மக்கள் வழிபட ஆட்சியர் நடவடிக்கை எடுத்திருக்கிறார். இது வரவேற்கத்தக்கது.

Congress insists that strict action should be taken against those who damaged the statue of Ambedkar

இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்

ஆனால் இதையெல்லாம் பொறுத்துக் கொள்ளமுடியாமல் அமைதி பூங்காவாகவுள்ள தமிழகத்தில் விளிம்பு நிலை மக்களின் மீது தொடர்ந்து வன்முறையை கட்டவிழ்த்து விடுவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். இதை ஒருபோதும் அனுமதிக்க கூடாது. மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இதுபோன்ற செயல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும். இச்செயலைச் செய்த சமூகவிரோத சக்திகளை உடனடியாக கைது செய்யவேண்டும் எனவும் கேட்டுக் கொள்வதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

தமிழக அரசின் நடவடிக்கை மிகுந்த வலியையும்,ஏமாற்றத்தையும் அளிக்கிறது- திமுகவிற்கு எதிராக சீறிய வேல்முருகன்

Follow Us:
Download App:
  • android
  • ios