காங்கிரஸ் கட்சியில் பிரியங்கா காந்திக்கு எதிராக மிகப்பெரிய சதி நடைபெற்றுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.

   இந்திய அளவில் மிகவும் பிரபலமான தேர்தல் வியூகம் வகுப்பவராக கருதப்படுவர் பிரசாந்த் கிஷோர். குஜராத் முதலமைச்சராக இருந்த போது முதல் மோடியுடன் இருந்து வந்த அவர் மோடி பிரதமரான பிறகு அவரிடம் இருந்து விலகினார். மோடி குஜராத் முதலமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடிக்கவும், பிரதமராவதற்கும் முக்கிய காரணிகளில் பிரசாந்த் கிஷோரும் ஒருவர் என்று கூறப்படுகிறது.

   மோடியிடம் இருந்து பிரிந்த பிறகு ஐக்கிய ஜனதா தளம் தலைவரான நிதிஷ் குமாருடன் பிரசாந்த் கிஷோர் இணைந்தார். 2016ம் ஆண்டு நடைபெற்ற பீகார் தேர்தலில் பா.ஜ.கவை வீழ்த்தி ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி அரசு அமைய காரணமாக இருந்தவரும் பிரசாந்த் கிஷோர் தான் என்று சொல்லப்படுகிறது. அதன் பிறகு காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் இணைந்தார்.

   கடந்த ஆண்டு நடைபெற்ற உத்தரபிரதேச தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூகங்களை இவர் தான் வகுத்தார். ஆனால் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து பிரசாந்த் கிஷோர் மீண்டும் நிதிஷ் குமாருடன் இணைந்தார். தற்போது பீகாரை ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவராக பிரசாந்த் கிஷோர் அண்மையில் நியமிக்கப்பட்டார்.

   இதனை தொடர்ந்து ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு பிரசாந்த் கிஷோர் பேட்டி அளித்தார். அப்போது உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலின் போது பிரச்சாரத்திற்கு பிரியங்கா காந்தி வர வேண்டும் என்கிற ஒரு வியூகத்தை தான் முன்வைத்ததாக கூறினார். அதாவது நட்சத்திர பேச்சாளராக பிரியங்கா காந்தியை முன்னிறுத்தி வியூகம் வகுத்ததாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

   ஆனால் பிரியங்கா காந்தியை பிரச்சாரத்திற்கு அனுமதிக்க முடியாது என்று காங்கிரஸ் மேலிடம் கூறிவிட்டதாக பிராந்த் கிஷோர் தெரிவித்தார். மேலிடம் என்றால் சோனியா காந்தியா? என்று நெறியாளர் அர்னப் கோஷ்வாமி எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்க பிரசாந்த் மறுத்துவிட்டார். இதன் மூலம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தரப்பினரே பிரியங்காவுக்கு எதிராக சதி செய்து அவரை உத்தரபிரதேச தேர்தலில் பிரச்சாரம் செய்யவிடாமல் தடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.