நடைபெற்று முடிந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்காக இடைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று புதிய அரசு அமைக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 13 தொகுதிகளில் மட்டுமே திமுக வெற்றி பெற்றது. 9 தொகுதிகளில்  அதிமுக வெற்றி பெற்றதால் எடப்பாடி ஆட்சி தப்பித்து கொண்டது.

இதையடுத்து திமுக முக்கிய தலைவர்கள் அதிமுக அரசைக் கவிழ்க்க முயற்சி செய்து வருவதாகவும், அதற்கு ஸ்டாலின் பச்சைக் கொடி காட்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில்  30 அதிமுக எம்எல்க்களிடம் திமுக பேசி முடித்துவிட்டதாகவும், விரைவில் கவிழ்ப்பு வேலைகள் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய  தமிக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தற்போதைய தமிழக அரசு ஒரு நூலிழையில்  நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது எப்போது வேண்டுமானாலும் கவிழும் என தெரிவித்தார்.

எடப்பாடி அரசைக் கவிழ்ப்பதற்காக திமுக செய்யும் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழக காங்கிரஸ் துணை நிற்கும் என்றும் அழகிரி தெரிவித்தார்.