திருச்சியைச் சேர்ந்தவர் துரைமுருகன். இவர் நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பாக ஸ்ரீ பெரும்புதூரில் இருக்கும் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் நினைவிடத்திற்கு சென்று டிக் டாக் காணொளி எடுத்து வெளியிட்டார். அதில் ராஜிவ் காந்தியை தாங்கள் தான் கொன்றோம் என சீமான் ஒரு பொதுக்கூட்ட மேடையில் பேசிய வசனம் இடப்பெற்று பெரும் சர்ச்சையை கிளப்பியது. காங்கிரஸ் சார்பாக காவல்துறையில் நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அதை வெளியிட்ட துரைமுருகன், காணொளியை நீக்கி மன்னிப்பு கோரினார். நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகியின் இச்செயலை கண்டித்து வடசென்னை காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தண்டையார்பேட்டை தபால் நிலையம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட துரைமுருகனை கைது செய்ய வேண்டும் என காங்கிரசார் கோஷமிட்டனர். பின் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது.

190 கி.மீ...! 1 மணி 50 நிமிடங்கள்..! நோயாளியை காப்பாற்ற உயிரை பணயம் வைத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்..!

அதில், 'நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தூண்டுதலின் பேரில் அந்த கட்சியைச் சேர்ந்த சாட்டை முருகன் என்பவர் ராஜீவ்காந்தி சமாதிக்கு சென்று அவரை அவமதிக்கும் வகையில் வசனம் பேசி டிக்டாக் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் பற்றி தவறான கருத்தை கூறி டிக்டாக் வெளியிட்ட சாட்டை முருகனை கைது செய்ய வேண்டும். அதற்கு தூண்டுதலாக இருந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டிருக்கிறது.

'அவ இல்லாம வாழ முடியல'..! மனைவி இறந்த துக்கத்தில் மகன்களை கொன்று தந்தை எடுத்த கோர முடிவு..!