17 ஆவது மக்கவைத் தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ளது. நாளை மறுநாள் தேத்ர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இத் தேர்தலில்  காங்கிரஸ் மற்றும் பாஜக  இடையே இதில் கடும் போட்டி நிலவுகிறது. பல மாநிலங்களில் இரு கட்சிகளும் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

தமிழகத்தில்  காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸ் 10 இடங்களில் போட்டியிடவுள்ளது. இதனிடையே தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே காங்கிரஸ் கட்சி தனது முதல் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.

15 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை காங்கிரஸ் கட்சி  வெளியிட்டுள்ளது. அதில், உ.பி.,யின் ரேபரேலி தொகுதியில் சோனியாவும், அமேதி தொகுதியில் ராகுலும் மீண்டும் போட்டியிடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உ.பி.,யில் 11 தொகுதிகளுக்கும், குஜராத்தில் 4 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை காங்கிரஸ்  கட்சி அறிவித்துள்ளது.

01. ரே பரேலி (உ.பி.,) - சோனியா
02. அமேதி(உ.பி.,) - ராகுல்
03. உன்னாவோ(உ.பி.,) -அனுடாண்டன்
04. பரூக்காபாத்(உ.பி.,) -சல்மான் குர்ஷித்

05. அகபர்பூர்(உ.பி.,) - ராஜாராம் பால்
06. ஜலாவுன்(உ.பி.,)- பிரிஜ் லால் கர்பி
07. பைசாபாத்(உ.பி.,) - நிர்மல் காத்ரி
08. குஷிநகர்(உ.பி.,) - ஆர்பிஎன் சிங்
09. ஷஹரான்பூர்(உ.பி.,) - இம்ரான் மசூத்
10. பதூன்(உ.பி.,) - சலீம் இக்பால் ஷெர்வானி
11. ஷவுரஹ்ரா(உ.பி.,) -ஜிதின்பிரசாத்
12. ஆமதாபாத் மேற்கு (குஜராத்) - ராஜூபார்மர்
13. ஆனந்த்(குஜராத்)- பாரத் சிங் எம்.சோலங்கி
14. வதோதரா(குஜராத்) - பிரசாந்த் படேல்

15. சோட்டா உதய்ப்பூர்(குஜராத்)- ரஞ்சித் மோகன்சிங் ரத்வா

வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு காங்கிரஸ் கட்சி சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியுள்ளது அந்த கட்சியினருக் குஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.