Asianet News TamilAsianet News Tamil

பாஜகவுக்கு எதிராக மக்களை துன்புறுத்தும் காங்கிரஸ் போராட்டத்திற்கு ஆதரவில்லை... மம்தா தடாலடி..!

எதிர்கட்சிகள் இணைந்து நடத்தும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான முழு அடைப்பிற்கு ஆதரவு அளிக்க மாட்டேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Congress does not support protests against BJP says mamta
Author
West Bengal, First Published Jan 7, 2020, 11:32 AM IST

குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இது மத அடிப்படையில் துன்புறுத்தலுக்கு ஆளாகி, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து இந்தியா வந்த முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது.  மத ரீதியில் பாகுபாடு காட்டுவது இந்திய அரசியலைமைப்புக்கு எதிரானது எனக்கூறி  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. Congress does not support protests against BJP says mamta

இந்த நிலையில், குடியுரிமை திருத்த  சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து வரும் 8-ம் தேதி நாடு முழுவதும் முழுஅடைப்பு போராட்டம் நடத்த இடதுசாரி கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த முழுஅடைப்பு போராட்டத்துக்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவை கோரிக்கை விடுத்திருந்தன. இந்நிலையில், முழுஅடைப்பு போராட்டத்துக்கு ஆதரவளிக்க மாட்டேன் என்று மம்தா தெரிவித்துள்ளாா். 

Congress does not support protests against BJP says mamta

இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், “மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகிய திட்டங்களுக்கு எதிராக போராட்டம், பேரணியில் ஈடுபடுவதற்கு நான் ஆதரவளிப்பேன். ஆனால், மக்களுக்கு துன்பம் ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் முழுஅடைப்பு போராட்டம் நடத்துவதற்கு ஆதரவளிக்க மாட்டேன்’எனத் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios