தீவிரவாதத்தை தூண்டும் அண்ணாமலையை கைது செய்திடுக! வன்முறை பேச்சின் பின்னனி என்ன ? கேள்வி எழுப்பும் காங்கிரஸ்


தீவிரவாதத்தை தூண்டும் வகையில், பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காங்கிஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

Congress demands arrest of Annamalai who spoke to incite terrorism

ராணுவ வீரர் கொலை- பாஜக போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்டதையடுத்து பாஜக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், தமிழக அரசை மிரட்டி பேசினர். இதன் காரணமாக முன்னாள் ராணுவ வீரரும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான கர்னல் பாண்டியன் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் இதே கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவில்,  உங்களுடைய கையில் துப்பாக்கி இருக்கு, துப்பாக்கி குள்ள குண்டு இருக்குனா ஆர்டர் கொடுக்க மோடி இருக்கார்னா சுட்டு தள்ளிட்டு வந்துட்டே இருங்க.. மிச்சதை பாஜக தமிழகத்தில் பார்த்து கொள்ளும் என அண்ணாமலை பேசியுள்ளார்.  

 

தீவிரவாதத்தை தூண்டுகிறார் அண்ணாமலை

அண்ணாமலையின் பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழக காங்கிஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ஆயுதச் சட்டம் 1959 நன்கு அறிந்த ஒரு முன்னால் ஐபிஎஸ் அதிகாரி"'உங்களுடைய கையில் துப்பாக்கி இருக்கு, துப்பாக்கிகுள்ள குண்டு இருக்கு, ஆர்டர் கொடுக்க மோடி இருக்கார், நீங்கள் சுட்டு தள்ளிவிட்டு வந்து கொண்டிருங்கள்" என்று கூறுகிறார் என்றால், இது தீவிரவாதத்தை தூண்டுவது இல்லையா? எல்லாம் தெரிந்த ஒரு முன்னால் ஐபிஎஸ் அதிகாரி இதை வேண்டுமென்றே கூறுகிறார் என்றால் அதன் பின்னணி என்ன?

Congress demands arrest of Annamalai who spoke to incite terrorism

அண்ணாமலை மீது வழக்கு

இவருடைய இந்த பேச்சுக்கு இந்திய ஆயுதச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க எல்லா முகாந்திரமும் உள்ளது. ஆகவே உடனடியாக மாநில அரசு அவர் மேல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இந்த பேச்சின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் கூட தன்னுடைய அதிகாரத்திற்கு உட்பட்டு Suo Moto வாக எடுத்துக்கொண்டு வழக்கு பதிவு உத்தரவிடலாம். ஆகவே மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

இன்னும் 5 வருடத்தில் தமிழகத்தை மிஞ்சும் உ.பி.. எப்படி தெரியுமா.? இப்படித்தான்.! அண்ணாமலை சொன்ன குட்டி ஸ்டோரி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios