இன்னும் 5 வருடத்தில் தமிழகத்தை மிஞ்சும் உ.பி.. எப்படி தெரியுமா.? இப்படித்தான்.! அண்ணாமலை சொன்ன குட்டி ஸ்டோரி
அரவக்குறிச்சி, திருமங்கலம் போல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தலைகுனிவை ஏற்படுத்தும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. அப்போது பேசிய அவர், “ஈரோடு கிழக்கு தேர்தல் விதிமீறல் என்பது 500 வழக்குகளை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
இந்த மாதிரி பரிசு பொருட்களை கொடுத்து தான்தேர்தல் நடத்த வேண்டுமா ? அப்படிபட்ட கட்சிகள் இருக்கனுமா ? அப்படி தான் வாக்களிக்க வேண்டுமா? என மக்களிடம் கேள்வி எழுப்புவதாக கூறினார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஒரு வாக்காளர்களுக்கு சராசரியாக ரூபாய் 20,000 மேல் செலவு செய்து உள்ளதாகவும், இதனால் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழக அரசியல் வளர்ச்சி பின்னால் செல்கிறது.
இன்னும் 5 ஆண்டுகளில் உத்தரபிரதேசம் தமிழகத்தை விட வளர்ந்து விடபோகிறது. கொள்ளை அடிக்கும் பணத்தை தேர்தலின்போது வெளியே எடுக்கப்படுகிறது. ஆட்சியில் கமிஷன் பெற்று சம்பாதித்த பணத்தை பினாமி மூலம் துபாய்க்கு அனுப்பி, அங்கிருந்து மீண்டும் தமிழகத்திற்கு கொண்டு வந்து தேர்தலில் செலவு செய்கிறார்கள்.
ஒரு தேர்தலுக்கு தொகுதிக்கு 45 கோடி ரூபாய், இடைத்தேர்தல் என்றால் 100 கோடியை தாண்டும். ஆளுங்கட்சிக்கு அதுவே 250 கோடி வரை செலவு செய்துள்ளார்கள். அரவக்குறிச்சி, திருமங்கலம் போல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தலைகுனிவை ஏற்படுத்தும். மக்கள் தான் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் . இல்லையென்றால் புதியவர்கள் அரசியலுக்கு வர மாட்டார்கள்.
லஞ்சம் வாங்குவது போல் தான் ஓட்டுக்கு பணம் வாங்குவதும், முதலில் பணம் வாங்குவது கஷ்டம் என்றாலும் பிறகு பழகிடும். அரவக்குறிச்சியில் தண்ணீர் இல்லை, விவசாயம் இல்லை, அதன் வளர்ச்சி அதலபாதாளத்தில் உள்ளது. 2024 தேர்தலிலும் தமிழகத்தில் 39 தொகுதிக்கும் இந்த புற்றுநோய் பரவ வேண்டுமா ? தானும் சீமான் போல பேச ஆரம்பித்துவிட்டதாகவும் என்று கூறினார்.
இதையும் படிங்க..Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வெல்லப்போவது எந்த கட்சி.? வெளியானது பரபர சர்வே முடிவுகள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போது முதல்வர் அறிவிப்பு என்பது தேர்தல் தோல்வி பயத்தில் தான் அறிவித்து விட்டதாக எண்ணுவதாகவும், முதலமைச்சர் பிரசாரத்தில் அறிவித்ததை வரவேற்றாலும், சொன்ன விதம், இடம், நேரம் தவறு என்றும், அறிவித்த படி பழைய பாக்கியை மீதமில்லாமல் பெண்களுக்கு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தனது மகன் செங்கலை எடுத்து வந்தததால் தான் 2021 ஆட்சிக்கு வந்தோம் என கூறுவது முதலமைச்சர் அவரையே அவமானம் படுத்திக்கொள்கிறார். 2026 ஆம் ஆண்டு எய்ம்ஸ் கட்டுமான பணிகள் முடிந்து, மக்கள் பயன்பாட்டிற்கு மருத்துவமனை வரும். இன்னும் எத்தனை நாள் செங்கல் விவகாரத்தை பேசி மக்களை ஏமாற்றுவீர்கள்.
உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் போல் அரசியலில் நடிப்பதாகவும், செங்கலை எடுத்தால், அந்த செங்கல் எடுத்து தோலை உரித்து உண்மையை சொல்வோம். 2024 தேர்தலில் பிரதமருக்காக மக்கள் வாக்களித்து தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றம் செல்வோம் என்று கூறினார்.
இதையும் படிங்க..ஸ்மார்ட் வாட்ச் முதல் குத்து விளக்கு வரை.. வீடு தேடி வரும் பரிசுகள்! ஈரோடு கிழக்கு தொகுதி பரிசு பொருள் லிஸ்ட்!