சமூக நீதிக்காக போராடியவர் பெரியார் அவருக்கு வாழ்த்து கூறுவதில் தயக்கம் இல்லை என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பிரதமர் நரந்திரமோடி யின் பிறந்தநாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டது. முன்னதாக சென்னை  பாண்டிபஜாரில் உள்ள நடைமேடையில்  மத்திய அரசின் சாதனைகள் அடங்கிய காணொளியை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்.  இதில் பாஜக  நிர்வாகிகள் தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.அதன் பின்னர் மோடியின் எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு மாநில மகளிர் அணி சார்பில் 70எனசெய்யப்பட்டிருந்தகேக்கை வெட்டி கொண்டாடினர். 

அதனை தொடர்ந்து  தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில், பாஜகவின் minority morchaஎன்ற டிவி சானலுக்கான லோகோவை எல்.முருகன் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, இன்று பலதரபட்ட மக்களும் பாஜக வை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர், அதற்கு முழு காரணம் மோடிதான். அருடைய  தூய்மையான ஆட்சிதான் காரணம் என்று கூறினார். மேலும் நீட் தேர்வு மூலம்  13 பேரின் உயிரில் விளையாடியது திமுக தான் எனவும்,  மாணவர்களின் உயிர் இழப்பிற்கு முழு காரணம் திமுக மட்டும்தான் என குற்றம் சாட்டினார். இன்றுபெரியரின் பிறந்தநாளுக்கு ஏன் நீங்கள் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்,சமூக நீதிக்காக போராடியவர் பெரியார் அவருக்கு வாழ்த்து கூறுவதில் எந்த தயக்கமும் இல்லை என்று தெரிவித்தார். 

திராவிடத்தை  அழிக்க புதிய கலாச்சாரம் தோன்றி இருக்கிறது என்ற துரை முருகனின் கருத்துக்கு பதில் அளித்த அவர்,யாருடைய கலாச்சாரத்தையும் நாங்கள் மறைக்கவில்லை எனவும் எங்கள் கலாச்சாரத்தை முன் நிறுத்துகிறோம் என்றும் அவர் கூறினார்.முன்னதாக ராமநாதபுரம் போகலூர் ஒன்றிய திமுக செயலாளர் மற்றும் திமுக ஒன்றிய கவுன்சிலர் கதிரவன் பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்தார்.