Asianet News TamilAsianet News Tamil

அமித்ஷா கொரோனாவில் இருந்து மீண்டு வர வாழ்த்து..!! இறைவனை வேண்டுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ட்விட்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா விரைவில் நலம் பெற வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Congratulations on your return from Amitsha Corona, Chief Minister Edappadi Palanichamy tweeted that he wanted God
Author
Chennai, First Published Aug 2, 2020, 8:35 PM IST

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, விரைவில் நலம் பெற வேண்டுமென தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அமித்ஷா பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு வைரஸ் அறிகுறி இருந்த நிலையில் மருத்துவ பரிசோதனையின் மூலம்  தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.  

இந்த தகவலை அமித்ஷாவே  தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்தை எட்டியுள்ளது. இந்த வைரஸ் அனைத்து தரப்பு மக்களையும், பாகுபாடின்றி தாக்கி வருகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் களத்தில் முன்னணியில் உள்ள மருத்துவர்கள், சுகாதாரப்  பணியாளர்கள், அதிகாரிகள், ஆட்சியாளர்கள், காவல்துறையினர் என அனைத்து தரப்பினரும்  கொரோனா தொற்றால் பரவலாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நாட்டின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும்  கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Congratulations on your return from Amitsha Corona, Chief Minister Edappadi Palanichamy tweeted that he wanted God 

இந்த தகவலை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அதில் கூறியிருப்பதாவது :- எனக்கு கொரோனா அறிகுறி இருப்பதை அறிந்து, கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன், பரிசோதனையில் வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.  நான் நன்றாக இருக்கிறேன், எனது உடல்நிலை சீராக உள்ளது.

ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறேன் என கூறியுள்ளார். மேலும், கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்வதுடன், கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என அமித்ஷா கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த சில மாதங்களாகவே கொரோனா வைரசுக்கு எதிரான களத்தில் அமித்ஷா சுற்றி சுழன்று பணியாற்றி வருகிறார்.

டெல்லியில் கொரோனா வைரஸ் வேகம் எடுத்த நிலையில், அவர் அம்மாநில முதலமைச்சருடனும், அதிகாரிகளுடனும் பல சுற்று ஆலோசனை கூட்டங்களை நடத்தி தொற்றை  கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கையை எடுத்தார். அதன்மூலம் அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

Congratulations on your return from Amitsha Corona, Chief Minister Edappadi Palanichamy tweeted that he wanted God

முழு அடைப்பு மற்றும் கட்டுப்பாடுகளை தளர்த்துவது போன்றவற்றில் வழிகாட்டுதல்களை உருவாக்குவதிலும் அமித்ஷா முக்கிய பங்கு வகித்து வந்தார். அவர் கொரோனாவுக்கு எதிராக தீவிரமாக பணியாற்றி வந்த நிலையில், அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா விரைவில் நலம் பெற வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்  கருத்து பதிவிட்டுள்ள அவர், கொரோனா தொற்றிலிருந்து அமித்ஷா விரைவில் குணமடைய சர்வவல்லமையுள்ள இறைவனை பிரார்த்திக்கிறேன். அவர் விரைந்து உடல் நலம் பெறவும், அவரது ஆரோக்கியத்திற்கும் தமிழகத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios