Asianet News TamilAsianet News Tamil

மக்கள் பிரச்சனையை பேச அனுமதி இல்லையாம்... மிட் நைட் மசாலா பேச்சுக்கு மட்டும் அனுமதியா? விஜயதரணி ஆவேசம்

Cong. MLA Vijayatharani criticizes
Cong. MLA Vijayatharani criticizes
Author
First Published Jun 27, 2018, 11:16 AM IST


தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் நேற்று எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேசும்போது, இரவு நேரத்தில் இசையைக் கேட்டபடி தூங்குவது சுகமானது என்றும், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் நாட்டுப்புற பாடல்கள் நன்றாக இருப்பதாகவும் அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

Cong. MLA Vijayatharani criticizes

அப்போது பேசிய தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், துரைமுருகன் இசையை மட்டும் கேட்பாரா, இல்லை மிட் நைட் மசாலா பார்ப்பாரா? என்றார். இதற்கு உடனடியாக பதிலளித்த துரைமுருகன், இரவில் ஜெயக்குமார் பார்ப்பதை எல்லாம் நான் பார்க்கமாட்டேன் என்று கூறியிருந்தார்.

Cong. MLA Vijayatharani criticizes

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி கொறடா விஜயதரணி, சட்டப்பேரவையில் மிட் நைட் மசாலா பற்றி பேச நேரம் இருக்கிறது. மக்கள் பிரச்சனையைப் பற்றி பேச முயன்றால் சபாநயாகர் தடுக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Cong. MLA Vijayatharani criticizes

சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்களை நேற்று (25 ஆம் தேதி) அன்று  பேச அனுமதிக்கவில்லை. இதனை கண்டித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையை ஒரு நாள் புறக்கணித்தோம். தொடர்ந்து இன்று (26 ஆம் தேதி) அவையில் பங்கேற்ற காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் கே.ஆர்.ராமசாமி அனுமதி கேட்டார். 

அதற்கு சபாநாயகர், பத்து நிமிடங்களுக்குள் பேச வேண்டும் என்று கூறினார். தொகுதி பிரச்சனைகள், கோரிக்கைகளை பேற்றி பேசத்தான் சட்டப்பேரவை வருகிறோம். இங்கு பேச அனுமதி இல்லையென்றால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று கே.ஆர்.ராமசாமி கூறினார். இதையடுத்து பேச அனுமதி அளிக்கப்பட்டது. அதிலும் அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே சீக்கிரம் முடியுங்கள் என்று கூறுகிறார் சபாநாயகர்.

Cong. MLA Vijayatharani criticizes

சட்டப் பேரவையில் புகழ்ந்து பாடுவதற்கு, பாட்டு பாடுவதற்கெல்லாம் நேரக்கணக்கு பார்ப்பதில்லை. முன்னாள் மூத்த அமைச்சர் ஒருவர், இரவில் தூங்கும்போது பாட்டு கேட்பது சுகமாக இருக்கும் என்கிறார். அதற்கு ஒரு அமைச்சர், நடனத்தோடு பாட்டை ரசிப்பீர்களா? மிட்நைட் பாடல்களையும் ரசிப்பாரா? என்கிறார். உங்களைப் போல் நான் ரசிப்பதில்லை என்று அதற்கு பதில் அளிக்கிறார். இப்படி மிட்நைட் மசாலா பற்றி பேச நேரம் இருக்கிறது, அனுமதி வழங்குகிறார். சபாநாயகர். மக்கள் பிரச்சனையை பேச முயற்சித்தால் தடுக்கிறார். இப்படித்தான் நடக்கிறது சட்டமன்றம் என்று எம்.எல்.ஏ. விஜயதரணி குற்றம் சாட்டினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios