Condemned to Tha.Pandian! Tamilisai who criticized Thomas Pandian

தா.பாண்டியன் மதவெறுப்பை காட்டுவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பல்வேறு அரசியல் சூழ்நிலைகளுக்கிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பாக காவிரி புஷ்கரணியில் நீராடினார்.

இதன் பிறகு, நேற்று திருப்பதிக்கு எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தா. பாண்டியன் குறித்து விமர்சனம் செய்திருந்தார். 

தா. பாண்டியனின் விமர்சனத்தை கண்டிக்கும் வகையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்தொன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், தமிழக முதலமைச்சர், திருப்பதி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததை கேலி பேசி, மதவெறுப்பைக் காட்டும் தா.பாண்டியன் என்ற தாமஸ் பாண்டியனைக் கண்டிக்கிறேன் என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

தா.பாண்டியன் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் செய்துள்ள டுவிட்டர் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.