நீதிபதியை மாற்ற தலைமை நீதிபதிக்கு மனு... இது கீழ்தரமானசெயல் என ஓபிஎஸ் தரப்பை கண்டித்த நீதிபதி.
அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரிக்கும் தன்னை மாற்ற வேண்டுமென தலைமை நீதிபதிக்கு ஓபிஎஸ் தரப்பு கடிதம் எழுதி இருப்பது கீழ்த்தரமான செயல் என்றும் நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல் இது என்றும் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரிக்கும் தன்னை மாற்ற வேண்டுமென தலைமை நீதிபதிக்கு ஓபிஎஸ் தரப்பு கடிதம் எழுதி இருப்பது கீழ்த்தரமான செயல் என்றும் நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல் இது என்றும் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
முழு விவரம் பின்வருமாறு:- ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவருடன் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து என்பவரும் தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என அம்மனுக்களை தள்ளுபடி செய்தார். இதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அப்போது உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றமே இதை விசாரிக்கலாம் என்றும், இரண்டு வார காலத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதையும் படியுங்கள்: சர்ச்சை பேச்சு விவகாரம்... தலைமறைவான கனல் கண்ணன்... எந்த நேரத்திலும் கைதாக வாய்ப்பு!!
அதன் அடிப்படையில் அந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் நாளை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 11ஆம் தேதி கிருஷ்ணன் ராமசாமி இட்ட உத்தரவில் பன்னீர்செல்வம் குறித்து சில தேவையில்லாத கருத்துக்களை கூறினார், இந்நிலையில் இந்த வழக்கு இருந்து நீதிபதியை மாற்ற வேண்டும் ஓபிஎஸ் மற்றும் வைரமுத்து தரப்பில் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இந்த வழக்கை திங்கட்கிழமைக்கு தள்ளி வைக்க வேண்டும் என ஓபிஎஸ் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: ஜிஎஸ்டி குறித்து நிர்மலா சீதாராமன் கூறியதில் உண்மையில்லை... பழனிவேல் தியாகராஜன் அதிரடி!!
அப்போது நீதிபதி ஏன் என கேள்வி எழுப்பியபோது, கடந்த 11ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் தனக்கு எதிராக கடுமையான கருத்துக்களை நீதிபதி தெரிவித்ததாகவும், பொதுக்குழு நடக்க இருந்த கடைசி நேரத்தில் உத்தரவு பிறப்பித்ததாலும் இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரி தலைமை நீதிபதியிடம் மனு அனுப்பி இருப்பதாகவும் எனவே இதை ஒத்திவைக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் கூறினார். அதே கேட்டு அதிருப்தி அடைந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, தீர்ப்பில் தவறு இருந்தால் மேல்முறையீடு செய்யுங்கள், திருத்தம் இருந்தால் அது குறித்து தன்னிடம் முறையீடு செய்திருக்கலாம் ஆனால் உத்தரவில் குறிப்பிட்டதுபோல தனது கருத்துக்களை நியாயப்படுத்துவகையிலேயே இன்னும் அவருடைய செயல்பாடுகள் உள்ளது,
நீதிபதியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக நடைமுறையை தனியாக பார்த்துக் கொள்ளுங்கள் என நீதிபதி தெரிவித்ததுடன், உங்கள் மனுதாரரை தவறாக வழி நடத்தாதீர்கள் என்றும் வழக்கறிஞருக்கு கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடர முடியும் என்றும் அவர் எச்சரித்தார், அப்போது இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் அறியாமையால் ஒரு சில வழக்கறிஞர்கள் இப்படி செயல்படலாம் இதை தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்றும் நீதிபதியிடம் சமாதானம் செய்யும் வகையில் பேசினர். பின்னர் வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டுமென்ற ஓபிஎஸ் தரப்பின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்.