Complete election vetpumanutakkal - vigorous campaign started

ஆர்.கே.நகர் தொகுதி இடைதேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுதாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஜெயலலிதா மறைவையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி இடைதேர்தல் ஏப்ரல் 12 தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுதாக்கல் கடந்த மார்ச் 16 ஆம் தேதி தொடங்கியது.

இந்த இடைதேர்தலில் அதிமுக அம்மா, அம்மா அதிமுக, திமுக, தேமுதிக, சி.பி.எம், எம்.ஜி.ஆர்.அம்மா தீபா பேரவை, பா.ஜ.க, உள்ளிட்ட சுயேச்சை கட்சிகள் 70 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 305 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 307 பெண் வாக்காளர்களும், 109 மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர்.

மொத்தமாக 2 லட்சத்து 62 ஆயிரத்து 721 வாக்காளர்கள் ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ளனர். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்காக தொகுதியில் 51 இடங்களில் 256 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வேட்பு மனுதாக்கல் செய்ய இன்று தான் கடைசி நாள் என்று ஏற்கனவே அறிவிக்கபட்டிருந்தது. அதன்படி கடைசி நாளான இன்று மதுசூதனன், டி.டி.வி தினகரன், தீபா ஆகியோர் இன்று வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

இதையடுத்து இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்பு மனுதாக்கல் நிறைவு பெற்றது.

வேட்பு மனுதாக்களுக்கான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசிநாள் 27 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வேட்பு மனுதாக்கல் செய்த அரசியல் தலைவர்கள் இன்று மாலையில் இருந்தே பிரட்சாரத்தை தொடங்கியுள்ளனர்.