கருணாநிதி நினைவிடத்தில் வாழ்க்கை வரலாறு படத்தை நிறுத்துங்கள்.!ஒலி அமைப்பையும் தடை செய்யுங்கள்- அதிமுக புகார்
கருணாநிதி நினைவிடத்தில் இரவு நேரத்தில் இருக்கிற ஒலி அமைப்பு திமுகவின் சின்னத்தை பிரதிபலிப்பது போல் உள்ளது என்றும், அதை ஒளிராமல் நிறுத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் தெரிவித்துள்ளது.
வாழ்க்கை வரலாறு படத்தை நிறுத்துங்கள்
நாடாளுமன்ற தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. மேலும் தேர்தல் ஆணையமும் தீவிரமாக சோதனை செய்து வருகிறது. மேலும் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள் அகற்றப்பட்டுள்ளது. மற்றும் மறைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் ஒளிபரப்பப்படும் கருணாநிதி வாழ்க்கை வரலாறு குறும்படத்தை தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு நிறுத்த வேண்டும் என அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிடம் புகார் மனு அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள புகார் மனுவில், தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக,
ஒலி அமைப்பில் திமுக சின்னம்
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் அவருடைய வாழ்க்கை வரலாற்றை விவரிக்கின்ற விதமாக அங்கே உள்ள காட்சியரங்கத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலான ஒலி ஒளி காட்சிகள் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என்றும், அந்த காணொளி அரங்கத்தை மூடி முத்திரையிட வேண்டும் என்றும்,
மேலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் இரவு நேரத்தில் இருக்கிற ஒலி அமைப்பு திமுகவின் சின்னத்தை பிரதிபலிப்பது போல் உள்ளது என்றும், அதை ஒளிராமல் நிறுத்த வேண்டும் என்று அதிமுக செய்தி தொடர்பாளரும்,வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளருமான ஆர் எம் பாபு முருகவேல் தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளார்.
இதையும் படியுங்கள்