அ.தி.மு.க.வில் அதிரிபுதிரியாய் அரசியல் பேசி, அடிச்சு நொறுக்கும் அமைச்சர்களில் கடந்த இரண்டு மாத காலமாகவே டிரெண்டிங்கில் முதல் இடத்தில் இருக்கிறார் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. கமல் விஷயத்தில் கதறக் கதற கருத்துக்களை போட்டுத் தாக்குபவர், தினகரனையும் விட்டே வைக்காமல் வெளுக்கிறார். 

அந்த வகையில் இப்போது  தினா குறித்து ரா.பா. தொடுத்திருக்கும் லேட்டஸ்ட் புகார் மாலை இதோ....
“மே 23-க்கு  பிறகு எல்லாமே மாறப்போகுது, அ.தி.மு.க.ங்கிற இயக்கமே இருக்கப்போறதில்லை, எல்லாரும் வேணும்னா இங்கே வந்து சேர்ந்துக்கோங்கன்னு சொல்லிட்டு திரியுறார் தினகரன். இதெல்லாம் வெத்துப் பேச்சு. 

அவரு யாரை வெச்சு கட்சி நடத்துறார் தெரியுமா? வெறும் குண்டர்களை வெச்சுக்கிட்டு கட்சி நடத்திட்டு இருக்கிறார். மே 23-க்கு பிறகு என்ன மாற்றம் வருமுன்னு நினைக்கிறீங்க, மே 24 வரும் அவ்வளவுதான். பெரிய அறிவாளி மாதிரி பேசுறார். அவரோட  சிலீப்பரு செல்லு (ஸ்லீப்பர் செல்) எங்க கட்சிக்குள்ளே இருக்குதுன்னு சொல்லிட்டு திரியுறார், இழுக்கு இழுக்கு எங்கே இழுக்கு?

நான் இப்ப ஓப்பன் சவால் விடுறேன், முடிஞ்சால் என்னை எதிர்த்து தேர்தலில் அவர் நிற்கட்டும். அவரை நான் டெபாசீட் இழக்க வைக்கிறேன். இது நடக்குதா இல்லையான்னு பாருங்க, முடிஞ்சா என்னை எதிர்த்து நிக்கட்டும்யா தினகரன்.” என்று வெறித்தனமாக வேகம் காட்டியுள்ளார். 
ராஜேந்திர பாலாஜி இப்படி தினகரனை அடிச்சுத் தூக்கிக் கொண்டிருக்க, அவரையே தினகரனின் ஸ்லிப்பர் செல்களில் ஒருவர்தான் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். எடப்பாடியின் கட்டளைக்கு கீழ்படியாமல், மெளனம் காக்காமல், வாய்க்கு வந்ததை பேசி, சர்ச்சைகளை கிளப்பி, மக்கள் மத்தியில் ஆட்சிக்கு கெட்ட பெயர் உருவாக்குவதுதான் ரா.பாலாஜிக்கு தினகரன் இட்டிருக்கும் கட்டளை! என்கிறார்கள். 
நெசமாவாண்ணே?