சசிகலா புஷ்பாவிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பொன்பால கணபதி மீது நடவடிக்கை எடுக்க கோரி சசிகலா புஷ்பாவின் கணவர் ராமசாமி பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

சசிகலா புஷ்பாவிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பொன்பால கணபதி மீது நடவடிக்கை எடுக்க கோரி சசிகலா புஷ்பாவின் கணவர் ராமசாமி பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கடந்த செப்.11 ஆம் தேதி தியாகி இமானுவேல் சேகரனின் 65 ஆவது நினைவு நாள் அனுசகரிக்கப்பட்டது. இதில் பாஜக சார்பில் முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா கலந்து கொண்டு இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க: முடிஞ்சா என்னை அரெஸ்ட் பன்னுங்க... சவால் விடுத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை!!

அப்போது முன்னாள் எம்பி சசிகலா புஷ்பாவை மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி பாலியல் தொந்தரவு செய்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது. இதை அடுத்து பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதிக்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ’நிதி மேலாண்மை படிச்ச உங்களுக்கு, மக்களின் நாடி துடிப்பு தெரியல’ - பிடிஆரை கலாய்த்த ஆர்.பி உதயகுமார் !

இது குறித்து தேசிய மகளிர் ஆணையம் பொன் பாலகணபதியை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்டம்பர் 11 ஆம் தேதி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று சசிகலா புஷ்பாவிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பொன்பால கணபதி மீது நடவடிக்கை எடுக்க கோரி சசிகலா புஷ்பாவின் கணவர் ராமசாமி ஆன்லைன் மூலம் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.