competetion for rooster symbol

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு வரும் 12 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் சசிகலா அணி சார்பில் தினகரனும், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூனனும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
இதையடுத்து இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற இரு தாப்பினரும் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஆனால் தேர்தல் ஆணையம் இரு அணிகளுக்கும் இல்லாமல் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து உத்தரவிட்டது.

இந்நிலையில் அதிமுகவின் இரு அணிகளும் தங்களது புதிய சின்னத்தை தேர்ந்தெடுப்பதற்காக காலை தேர்தல் ஆணையத்தை அணுகவும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு இரு அணியினரும் சேவல் சின்னத்தை கைபற்ற தீவிரம் காட்டி வருகின்றனர்.

எம்.ஜி.ஆர்., மறைந்த போது அதிமுக ஜானகி அணி ஜெ., அணி என இரண்டாக பிரிந்தது. அப்போதும் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. மேலும் அப்போது நடைபெற்ற தேர்தலில் ஜெயலலிதாவுக்கு சேவல் சின்னமும், ஜானகிக்கு இரட்டைப் புறா சின்னமும் ஒதுக்கப்பட்டது. அதில் ஜெயலலிதா 25 இடங்களில் வெற்றி பெற்று, கட்சியையும், சின்னத்தையும் கைபற்றினார்.

எனவே அ.தி.மு.க.,வை கைப்பற்ற ராசியாக இருந்த சின்னமான சேவல் சின்னத்தை பெற ஓபிஎஸ் மற்றும் சசிகலா அணியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

எப்படியாவது சேவல் சின்னத்தை கைப்பற்றி விட வேண்டும் என இரு தரப்பும் நினைப்பதால் முட்டல், மோதல் தொடங்கிவிட்டது.