திருப்பூரில் உள்ள அங்கேரிபாளையம் பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணியினர் அங்குள்ள  தனியார் பனியன் நிறுவனத்துக்குச் சென்று  விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு நன்கொடை தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஏற்கனவே தான் மற்றொரு குழுவிற்கு  தந்து  விட்டதாகவும் இன்னொரு முறை தர முடியாது என மறுத்துள்ளார்.

இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த இந்து முன்னனியினர் அந்த பனியன் நிறுவனத்தின் மீது  தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பனியன் கம்பெனியின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது மட்டுமின்றி, ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

தாக்குதல் நடத்தும் கும்பல், கையில் கிடைத்த பல்ப்புகளைக் கொண்டு பனியன் கம்பெனி ஊழியர்களை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக பனியன் கம்பெனி கொடுத்த புகாரின் அடிப்படையில், அனுப்புர்பாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக ஒரு குழுவிற்கு பணம் தந்து, மற்றொரு குழுவிற்கு பணம் தரவில்லை என்பதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது