Asianet News TamilAsianet News Tamil

பாஜகவை தடுத்த நிறுத்த கங்கணம் கட்டும் கம்யூனிஸ்டுகள்.. திமுக கூட்டணி வெற்றிபெற உழைக்க அழைப்பு..

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலும் அந்த அந்த நேரத்தில் முக்கியமான தேர்தலாக பார்க்கப்படும். ஆனால் இந்த தேர்தல் தமிழகத்தில் மிக முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது.  

Communists plan to stop BJP in tamilnadu .. and calls for work to win DMK alliance ..
Author
Chennai, First Published Mar 20, 2021, 6:19 PM IST

இந்தியா முழுவதும் மத பிரிவினையை உருவாக்கும் பாஜகவை தடுத்து நிறுத்த அனைவரும் திமுக தலைமையிலான மதச்சார்பின்மை கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள பாரதி புத்தகாலயத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில்  சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்  ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். அங்கு எதிர்காலத்தை - உரிமைகளைப் பாதுகாப்போம் என இரண்டு நூல்களை வெளியிட்டார். 

Communists plan to stop BJP in tamilnadu .. and calls for work to win DMK alliance ..

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலும் அந்த அந்த நேரத்தில் முக்கியமான தேர்தலாக பார்க்கப்படும். ஆனால் இந்த தேர்தல் தமிழகத்தில் மிக முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த தேர்தலில் தமிழகத்தில் உள்ள மத நல்லிணக்கம், சமூகநீதி, சுயசார்பு ஆகியவற்றை ஒழிக்கும் வகையில் இந்தியா முழுவதும் மத பிரிவினை உருவாக்கும் வகையில் தொடர்ச்சியாக பாஜக செயல்பட்டு வருகிறது. அது குறித்து மக்களுக்கு தேர்தல் நேரத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த இரண்டு புத்தகங்கள் வெளியிடப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். 

Communists plan to stop BJP in tamilnadu .. and calls for work to win DMK alliance ..

மேலும் தமிழகத்தில் இரண்டு திராவிட கட்சிகளுக்கு இடையில் நடைபெறும் தேர்தலில் இந்த முறை மத சார்பின்மைக்கு எதிராக நடத்தப்படும் நிகழ்வுகளை எடுத்து சொல்லியும் தொடர்ச்சியாக மக்களுக்கு பாஜக செய்யும் அநீதிகளை எடுத்து சொல்லியும், தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள திமுக கூட்டணி வெற்றிபெறு உழைக்க வேண்டும் என்றார். மேலும் மத பிரிவினையை உருவாக்கும் பாஜகவை தடுத்து நிறுத்த அனைவரும் மதச்சார்பின்மை கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios