Asianet News TamilAsianet News Tamil

தமிழக அரசின் அடுத்த அதிரடி…. உட்கார்ந்த இடத்தில் இருந்தே சாதி, இன்கம் சர்டிபிகேட் வாங்கிக்கலாம்…. புதிய ஆப் ரெடி !!

commuity and income certificate willbe get with your mobile
commuity and income certificate willbe get with your mobile
Author
First Published Jul 4, 2018, 9:34 AM IST


வீட்டில் இருந்தபடியே சாதி, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்களை பெறும் வகையிலான புதிய செயலியை  முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதையடுத்து சாதி மற்றும் வருமான சான்றிதழ்கள் பெறுவது எளிதாக்கப்பட்டுள்ளது.

இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டு வரும், தேசிய மின் ஆளுமை திட்டத்தின் மூலம் புதிய செல்போன் செயலி தேசிய அளவில் உருவாக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு துறைகள் முதல் உள்ளாட்சி துறைகள் வரை நாடு முழுவதும் மின் ஆளுமை மூலம் வழங்கப்பட்டு வரும் சேவைகளை ஒரே  வெப் சைட்டின்  கீழ் இந்த செயலி வழங்கும்.

commuity and income certificate willbe get with your mobile

தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் மூலம் மின்மாவட்ட திட்டத்தின் கீழ் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக, வருவாய் துறையை சேர்ந்த 3 சேவைகளான சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் மற்றும் பிறப்பிட, இருப்பிட சான்றிதழ் ஆகியவை  UM-A-NG  செயலியில் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது.

பொதுமக்களுக்கான அரசு துறைகளின் 63 சேவைகள் தமிழ்நாடு மின்ஆளுமை முகமையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பொதுசேவை மையங்கள் மற்றும் இ-சேவை மையங்கள் வழியாக மட்டுமே  தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

commuity and income certificate willbe get with your mobile

இங்கு கூட்டநெரிசலை தவிர்க்கும் வகையில், சேவைகளை இணையதளம் மூலம் பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் எளிதில் விண்ணப்பித்து பெற முடியும்.

இதை செயல்படுத்தும் விதமாக 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்  www.tnsev-ai.tn.gov.in/cit-iz-en என்ற திறந்தநிலை சேவைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக வருவாய் துறையின் 20 சான்றிதழ் சேவைகள் வழங்கப்பட உள்ளது. இந்த பொதுமக்களுக்கான இந்த திறந்தநிலை சேவை தளத்தை முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

commuity and income certificate willbe get with your mobile

இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் செல்போன்களில் www.tnsev-ai.tn.gov.in/cit-iz-en  என்ற இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, 24 மணி நேரம் வீட்டில் இருந்தபடியே சான்றிதழ்களை பெற முடியும்.

Follow Us:
Download App:
  • android
  • ios