MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • புதிய கட்சி தொடங்கும் சசிகலா ..! தவெகவுடன் கூட்டணி..! அதிமுக- அமமுக நிர்வாகிகள் ரகசிய சந்திப்பு..!

புதிய கட்சி தொடங்கும் சசிகலா ..! தவெகவுடன் கூட்டணி..! அதிமுக- அமமுக நிர்வாகிகள் ரகசிய சந்திப்பு..!

சசிகலா புதிய குச்சி தொடங்கினால் தமிழக அரசியலில் அது பெரும் திருப்புமுனையாக மாறும். அவரது புதிய கட்சியால் அதிமுகவுக்கு மட்டுமல்ல, அனைத்து தரப்பு அரசியல் கட்சிகளுக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது.

2 Min read
Author : Thiraviya raj
Published : Feb 07 2026, 06:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அதிமுகவினருடன் ரகசிய பேச்சுவார்த்தை
Image Credit : Asianet News

அதிமுகவினருடன் ரகசிய பேச்சுவார்த்தை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா விரைவில் புதிய கட்சி தொடங்க இருப்பதாக வெளியாகியுள்ள தகவலால் அதிமுக- அமமுக கூடாரம் ஆடிப்போயுள்ளது.

தமிழக அரசியலில் பேராளுமையான முன்னாள் அமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவும் ஒரு முக்கிய தலைவராகப் பார்க்கப்படுகிறார். தமிழ்நாடு முழுவதும் இவர் பின்னால் ஏராளமான ஆதரவாளர்கள் உள்ளனர். தொடர்ந்து, அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும். அம்மா ஆட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் சசிகலா. ஆனால், அந்த முயற்சிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார். ஊடகங்களுக்கு மட்டும் முகம் காட்டி வரும் சசிகலா, தனது வீட்டில் இருந்தபடியே அதிமுகவில் பலரிடமும் ரகசியமாக பேசி வருவதாகக் கூறப்படுவது உண்டு. அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவாக ஸ்லீப்பர்செல்கள் இருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.

24
சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் சசிகலா ஆதரவாளர்கள்
Image Credit : x

சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் சசிகலா ஆதரவாளர்கள்

அதிமுகவில் இணைக்கக்கோரி கெஞ்சிப்பார்த்து வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். அவரது நிலைப்பாடு என்ன என்பது தொடர் கேள்விக் குறியாக தொக்கி நிற்கிறது. இருந்தபோதும் அவர் அதிமுகவுடன் இணைக்கப்படுவார் என்கிறார்கள். இந்நிலையில் கடந்த 3ம் தேதி பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலாவிடம் சட்டமன்ற தேர்தலில் அவரது நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ‘‘வரும் சட்டமன்ற தேர்தலில் தனது ஆதரவாளர்கள் களமிறக்கப்படுவார்கள்’’ என்று கூறினார். இந்நிலையில் தனது ஆதரவாளர்களுடன் சசிகலா ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தி உள்ளார். அப்போது ‘‘சசிகலா சட்டமன்றத் தேர்தலில்போட்டியிட வேண்டும். புதிய கட்சி தொடங்க வேண்டும்’’’’ என்று நிர்வாகிகள் பலரும் அவரிடம் வலியுறுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக ஆலோசனை செய்த சசிகலா புதிய கட்சி தொடங்குவது என தீர்க்கமான முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிடவும் தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சசிகலா புதிய குச்சி தொடங்கினால் தமிழக அரசியலில் அது பெரும் திருப்புமுனையாக மாறும். அவரது புதிய கட்சியால் அதிமுகவுக்கு மட்டுமல்ல, அனைத்து தரப்பு அரசியல் கட்சிகளுக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போதே சசிகலா போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் அவர் சிறை சென்றதால் போட்டியிடவில்லை. அந்த சமயத்தில் ‘‘நான் தற்காலிகமாக அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போகிறேன். யாருக்கும் ஆதரவு இல்லை’’ எனக் கூறியிருந்தார். தற்போது சசிகலா தீவிர அரசியலில் குதிக்க திட்டமிட்டுள்ளார்.

Related Articles

Related image1
சிஎஸ்கே அணியை வாங்கும் உதயநிதி..! இத்தனை ஆயிரம் கோடியா..? ஐபிஎல் கிரிக்கெட்டில் பரபர ட்விஸ்ட்..!
34
டிடிவி.தினகரனால் மன உளைச்சலில் சசிகலா
Image Credit : Asianet News

டிடிவி.தினகரனால் மன உளைச்சலில் சசிகலா

இதற்கிடையே சசிகலாவை அதிமுகவில் உள்ள அதிருப்தியாளர்கள் சிலர் நேரில் சந்தித்து பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இதில் சில முக்கிய நிர்வாகிகளும் அடக்கம். டி.டி.வி.தினகரன் தலைமையிலான அமமுக மாணவியர் அணி செயலாளர் வழக்கறிஞர் ஜீவிதா நாச்சியார், திருமங்கலம் சட்டசபை பொறுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். அவர் நேற்று சசிகலாவை சந்தித்து பேசினார். இது குறித்து தகவல் அறிந்த டிடிவி.தினகரன், ஜீவிதா நாச்சியாரை அமுமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கினார். இதவும் சசிகலாவை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

44
தவெகவுடன் சசிகலா கூட்டணி
Image Credit : Asianet News

தவெகவுடன் சசிகலா கூட்டணி

வரும் சட்டமன்ற தேர்தல் தனக்கு செல்வாக்குள்ள முக்குலத்தோர் வசிக்கும் பகுதிகளில் போட்டியிடலாம் என சசிகலா முடிவெடுத்து இருக்கிறார். அதேவேளை தவெக கூட்டணியில் இணைந்து செயல்படவும் பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சில முக்கிய நிர்வாகிகள் தவெக நிர்வாகிகளுடன் சந்தித்து பேசி வருகிறார்களாம். முன்னதாக சசிகலா தரப்பை தவெகவில் இணைத்துக் கொள்வது குறித்து சற்று யோசித்த விஜய், சசிகலாவை இணைத்துக் கொண்டால் முக்குலத்தோர் வாக்குகள் கணிசமாக கிடைக்கும். தென் மாவட்டங்களில் கூட்டணிக்கு வலு கிடைக்கும். சசிகலாவை கூட்டணி சேர்த்தால் அதிமுக வாக்குகள் பிரிந்து தவெகவுக்கு வரும் என்று கருதுகிறார் விஜய். இன்னும் ஒரு சில தினங்களில் சசிகலா தனது புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் எனக் கூறப்படுகிறது. அத்தோடு வேட்பாளர் தேர்வுக்கும் அவர் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

About the Author

TR
Thiraviya raj

Latest Videos
Recommended Stories
Recommended image1
சோனியாவின் இந்திய குடியுரிமையில் அரசியல் சதி..! நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் விளக்கம்..!
Recommended image2
எம்.ஜி.ஆரின் வெறித்தன ரசிகரான மலேசிய பிரதமர்... கோலாலம்பூரில் பூரித்துப்போன பிரதமர் மோடி..!
Recommended image3
சிறைவாசத்தின் போது சசிகலாவை ஏமாற்றிய டிடிவி..? கொழுந்து விட்டு எரியும் மோதல்..! பகீர் பின்னணி..!
Related Stories
Recommended image1
சிஎஸ்கே அணியை வாங்கும் உதயநிதி..! இத்தனை ஆயிரம் கோடியா..? ஐபிஎல் கிரிக்கெட்டில் பரபர ட்விஸ்ட்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved