Asianet News TamilAsianet News Tamil

10 ஆண்டுகளாக அதிமுக செய்த மெகா ஊழல் அம்பலம்.. பத்திரப் பதிவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு!

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருந்த போது பத்திரப் பதிவுத்துறையில் மெகா ஊழல் நடைபெற்று வந்ததாக பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். 
 

commercial taxes and registration department minister moorthy says ADMK did mega scam
Author
Madurai, First Published Jul 12, 2021, 1:04 PM IST

மதுரை தொழிலாளர் நலத்துறை அலுவலகத் தில் கட்டுமான தொழிலாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமினை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி தொடங்கிவைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த 10ஆண்டு கால அதிமுக ஆட்சியில் பத்திரப் பதிவுத்துறையில் அரசு நிர்ணயம் செய்த தொகையினை விட மதிப்புக் குறைத்து பத்திரப் பதிவு செய்தவர்கள் குறித்து வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் முத்திரை தாள் தனி தாசில்தார் செந்தில்குமார் அரசுக்கு செலுத்த வேண்டிய 20 லட்சத்து 23ஆயிரத்து 680 ரூபாய் பணத்தை தனது வங்கி கணக்கில் செலுத்தி முறைகேடு செய்துள்ளார் என்பதை கண்டறிந்து இரவோடு இரவாக அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்தார். 

commercial taxes and registration department minister moorthy says ADMK did mega scam

பதிவுத்துறையில் கடந்த காலங்களில் நடைபெற்ற ஆள் மாறாட்டம், போலிப் பத்திரப் பதிவு போன்றவற்றை கண்ட றிந்து, அது குறுத்து விசாரணை நடத்தி அதிரடி நடவடிக்கை எடுக்கும் படி முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். மேலும் இது போன்று பல்வேறு சம்பவங்கள் அனைத்தும் கடந்த ஆட்சியில் நடந்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது என்றும், தற்போது இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பே இல்லை உறுதியளித்தார். 

commercial taxes and registration department minister moorthy says ADMK did mega scam

முன்பெல்லாம் பதினோறு, பனிரெண்டு மணிக்கு அலுவலகத்திற்கு தாமதமாக வரும் அதிகாரிகள் தற்போது சரியாக 10மணிக்கு எல்லாம் அலுவலகம் வந்து தங்கள் பணியை தொடங்குகிறார்கள் என்றும், பொதுமக்கள் மிகவும் எளிதாக அனுகும் வகையில் பத்திரப் பதிவுத்துறை செயல்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார். அதிமுக ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகளாக அறிவித்த திட்டங்களை கிடப்பில் போடப்பட்டு செயல்படுத்தவில்லை எனக்குற்றச்சாட்டிய அவர், திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதை படிப்படியாக நிறைவேற்றி வருவதாகவும், இரண்டு மாத காலத்திற்குள் ரூ10 ஆயி ரம் கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios