Asianet News TamilAsianet News Tamil

மதுரைக்கு வந்தும்... பழசை நினைத்து மனம் வெதும்பிய தெலங்கானா கவர்னர்..!

மதுரை தெப்பக்குளம் சென்றால் மாரியம்மனை வழிபடாமல் சென்றது இல்லை. 

Coming to Madurai ... Telangana Governor warmed by the thought of fruit ..!
Author
Tamil Nadu, First Published Oct 11, 2021, 11:38 AM IST

மதுரைக்கு வந்து மீனாட்சி அம்மனை தரிசிக்க முடியவில்லையே? என்ற வேதனை மனதில் நிலவுகிறது எனதெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Coming to Madurai ... Telangana Governor warmed by the thought of fruit ..!
 
மதுரையில் இது குறித்து பேசிய அவர், ‘’மதுரையில் சிலம்பாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றது உண்மையிலேயே மகிழ்ச்சி தருகிறது. எனக்கும் மதுரைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நான் இங்கு தான் ஆரம்பக்கல்வி பயின்றேன். என் தந்தை அப்போது இங்கு டுட்டோரியல் காலேஜ் நடத்திவந்தார். நான் பள்ளிக்கூடத்தில் சேருவதற்கு முன்பாக மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு எடுத்துச் சென்று இறைவனுக்கு படைத்து விட்டு, அதற்குப் பிறகுதான் பள்ளிக்கூடத்தில் அப்பா சேர்த்து விட்டார்.Coming to Madurai ... Telangana Governor warmed by the thought of fruit ..!

பாரம்பரியம் மிகுந்த மதுரை மண்ணுக்கு வந்தது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி தருகிறது. அதே வேளையில் மதுரைக்கு வந்து மீனாட்சி அம்மனை தரிசிக்க முடியவில்லையே? என்ற வேதனை மனதில் நிலவுகிறது.புதுச்சேரி மாநிலத்தில் கோவில்கள் எல்லாம் திறந்து தான் உள்ளன. மதுரை தெப்பக்குளம் சென்றால் மாரியம்மனை வழிபடாமல் சென்றது இல்லை. ஆனால் இன்றைக்கு மதுரை வந்தும், தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலுக்கு செல்ல முடியவில்லை.

Coming to Madurai ... Telangana Governor warmed by the thought of fruit ..!

எனவே தமிழக அரசு இந்த வி‌ஷயத்தில் முடிவை மறுபரிசீலனை செய்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து'' என அவர் தெரிவித்தா.

Follow Us:
Download App:
  • android
  • ios