நிலம் வாங்கி தருவதாக கூறி நடிகர் சூரியிடம் ரூ.2.70 கோடி மோசடி செய்தவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. 

நகைச்சுவை நடிகர் சூரி சமீபத்தில் சென்னை காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வாலை சந்தித்து புகார் மனு அளித்திருந்தார்.காமெடி நடிகர் சூரியிடம் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2.70 கோடி மோசடி நடந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டது.இந்த நிலையில் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘வீர தீர சூரன்’ படத்தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், ரமேஷ் என்பவர் மீது அடையாறு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். வீர தீர சூரன் படத்தில் நடித்ததற்காக நடிகர் சூரிக்கு ரூ. 40 லட்சம் சம்பள பாக்கி வைத்துள்ளார் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன். சம்பள பாக்கியை தர மறுத்த நிலையில் நிலம் வாங்கி தருவதாக கூறி நடிகர் சூரியிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளனர்.இதுகுறித்து நடிகர் சூரி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பந்தபட்ட நபர்களை போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைத்துள்ளனர். நடிகர் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் சூரி மதுரையில் உயர்ரக உணவகங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.இவரின் உணவகங்களை முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் திறந்து வைத்தார்.