தேர்தல் ஆணையத்தின் விதிப்படி வாக்கு சாவடியில் இருந்து 200அடி தூரத்தில் தான் கட்சிகளின் முகாம்கள் அமைக்க வேண்டும். கட்சியின் பெயர், விளம்பர பலகை சின்னம் என்று அனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆர் கே நகர் இடைத்தேர்தல் வரும் 12ம் தேதி நடை பெற உள்ளது. தேர்தல் சுமுகமாக நடக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

தொப்பி அணிவதை ஒருசிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். அதே போல் விளையாடும் சிறுவர்களும் தொப்பி அணிகின்றனர்.

மறைந்த முதலமைச்சர் எம். ஜி. ஆர். அவர்கள் தொப்பி அணியாமல் வெளியே வரமாட்டார். தொப்பி என்பது பேஷனாகி விட்டது.

ஆனால் காவல்துறையினர் கண்டிப்பா தொப்பி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அதிமுக அம்மா கட்சி வேட்பாளருக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

 தேர்தல் ஆணைய உத்தரவுபடி வாக்கு சாவடிக்குள் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் அவர்கள் தொப்பி அணிந்திருப்பார்கள். வாக்கு சாவடிக்குள் அவர்கள் அணிந்திருக்கும் தொப்பி அம்மா கட்சி வேட்பாளரை ஞாபகபடுத்தும் படி இருக்கும். இதற்கு என்ன முடிவு எடுக்கப்போகிறது தேர்தல் ஆணையம்???