கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டு காது குத்து விழா மிக பிரம்மாண்டமாக மதுரையில் நடந்தது. இந்த விழாவில் மாமன் மச்சான், அங்கலி பங்காளி வைத்த மொய் பணம்  என தகவல் கிடைத்துள்ளது.

அரசியல் வரலாற்றில் முதன் முறையாக முதல்வரும், துணை முதல்வரும் கலந்து கொள்ளும் வைபவம்’ எனும் அருட்பெரும் பட்டத்தை சென்றது செல்லூர் ராஜூ வீட்டு விசேஷம் தான்.

என்னதான் மங்குனி மினிஸ்டராக மீம்ஸ்களில் வறுபட்டாலும் கூட அமைச்சர் செல்லூர் ராஜூ பலே அரசியல் கில்லாடிதான். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது கவனத்தை ஈர்ப்பதற்காக இவர் நடத்திய நிகழ்ச்சிகள் செமம!  போங்க. ஜெயலலிதாவுக்காக முதலாமாண்டு நினைவு நாள் அமைதி ஊர்வலத்தை கூட அமர்க்களமாக நடத்தியவர் தான் செல்லூர் ராஜூ.

இப்பேர்ப்பட்ட செல்லூர் ராஜூ தனது வீட்டு வைபவத்தை ஜஸ்ட் லைக் தட் ஆகவிட்டு வைப்பாரா? நாளை ஞாயிற்றுக் கிழமையன்று மதுரை அருகே பாண்டி கோயிலில் வைத்து செல்லூர் ராஜின் மகள்கள் வழி பேரக்குட்டிகளுக்கு காதணி விழா மிக பிரம்மாண்டமாக இருந்தது. ஞாயிறன்று மதுரையே திருவிழாக்கோலம் பூண்டது. சீர் வரிசை தட்டுக்கள்  என தடபுடலாக இருந்தது.

முதல்வர் எடப்பாடியாரும், துணை முதல்வர் பன்னீரும் கலந்து கொள்கிறார்கள். இதைத்தான் ‘தமிழக அரசியலில் முதன் முறையாக முதல்வர்கள் கலந்து கொள்ளும் காதணி விழா’ என்று இறுமாப்பாக மீசையை முறுக்கி கர்வமாய் சொல்கிறது செல்லூர் ராஜூவின் ஆதரவுக் கூட்டம்.

 விசேசத்தில் பங்கேற்றவர்கள் கொண்டு வந்த சீர் வரிசையை பார்த்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்று குழந்தைகளை வாழ்த்தினர். மாலை அணிவித்து பரிசுப்பொருட்களை கொடுத்தனர்.

மதுரை பக்கமெல்லாம் விசேஷம் என்றால் கிடா வெட்டி கரி காஞ்சி ஊத்துவது வழக்கம்,  அதுவும் அமைச்சர் வீட்டு விஷேசத்தில் சொல்லனுமா. விழாவை சிறப்பிக்க  வந்திருந்த அனைவருக்கும் கிடா வெட்டு விருந்து, அசைவ விருந்து தடபுடல் தான் போங்கோ...

இது ஒருபுறமிருக்க... சீர் செய்தது ஒரு பக்கம் ஆச்சரியப்படுத்த, வந்திருந்த மாமன், மச்சான் அங்காளி, பங்காளி எல்லாம் லட்சங்களில்தான் மொய் வைத்தார்களாம். மொய் பணம் மட்டும் 2 கோடிக்கு வசூலானதாக சொல்கிறது புள்ளி விபரம்.