பேஸ்புக்கில் பழகிய நண்பர்களால்  20 வயதுடைய கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்பை  கொடூரமாக சேதப்படுத்தி தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில் அந்தப் பெண்ணின் அந்தரங்க உறுப்பில் தையல் போடப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.   நேற்று முன்தினம் ஆக்ராவை சேர்ந்த  20 வயதுடைய பல்கலைக்கழக மாணவி ஒருவர் தாஜ்கஞ் பகுதியிலுள்ள குடியிருப்பில் நிர்வாண கோலத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் கிடந்தார் . 

அந்தப் பெண்ணின் நிலைமையை கண்ட சிலர் அவரை மீட்டு ஆக்ரா அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .   அந்த பெண் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட போது மயக்க நிலையில் இருந்தார் ,  இது குறித்து தெரிவித்துள்ள அந்த பெண்ணுக்கு சிகிச்சை வழங்கும் மகளிர் மருத்துவர் ஒருவர்,   அந்தப் பெண் கூட்டு பாலியல் பலாத்கரத்திற்கு ஆளாக்கப்பட்டு உள்ளார்  அவரின் பெண்ணுறுப்பு மோசமாக காயம் அடைந்து உள்ளது .  எனவே அவரின் பெண்ணுறுப்பில்  தையல் போடப்பட்டுள்ளது இந்நிலையில்  அவரது ரத்த மாதிரியை பரிசோதித்து வருகிறோம் .  அவர்   கவர் மயக்கநிலையில் உள்ளார் என தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து தெரிவித்துள்ள போலீசார் அந்த பெண்  ஃபேஸ்புக் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள தொடர்பால் உருவான நண்பர்களால் குடோனுக்கு வரவழைக்கப்பட்டு அங்கு வைத்து  பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார் .  அந்தப் பெண்ணை ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் என்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது .  அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தும் அளவிற்கு அவரது உடல் நிலை தற்போது ஒத்துழைக்கவில்லை என தெரிவித்த போலீசார் மயக்கம் தெளிந்த பின்னர் அந்த பெண்ணிடம் விசாரிக்கப்பட உள்ளது என்றார்.  அந்த பெண்ணை இந்நிலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார்  உறுதி அளித்துள்ளார்.