அதிமுக கூட்டணியில் அதிமுகவிடம் தேமுதிக கேட்ட 20 தொகுதிகளின் பட்டியல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக கூட்டணியில் தேமுதிக உடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்துவருகிறது. குறைந்தபட்சம் 20 தொகுதிகளையாவது வழங்க வேண்டும் தேமுதிக எதிர்பார்க்கிறது. ஆனால், 14 தொகுதிகள் வரை வழங்க அதிமுக முன்வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் எல்.கே.சுதிஷ், அதிமுக பற்றி அடித்த கமெண்டால், அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கேட்ட தொகுதிகளை அதிமுக வழங்கினால், உடனடியாக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தேமுதிக போட்டியிட விரும்பி அதிமுகவிடம் கேட்ட 20 தொகுதிகள் கொண்ட உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி ஆலந்தூர், விருகம்பாக்கம், ராணிப்பேட்டை, ஆம்பூர், அரக்கோணம், விருதாச்சலம், ஈரோடு கிழக்கு, சேலம் வடக்கு, சோளிங்கர், தருமபுரி, ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், திருவள்ளூர், திருத்தணி, விருதுநகர், மதுரை மத்தி, மேட்டூர், மயிலாடுதுறை, பண்ரூட்டி, பேராவூரணி ஆகிய தொகுதிகளை கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
