BREAKING: டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் முடிவு கைவிடப்பட்டது! அண்ணாமலை வெளியிட்ட குட்நியூஸ்
காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி கோரப்படுவதற்கான டெண்டர் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் டெல்டா விவசாயிகளையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த டெல்டா மக்களையுமே பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
காவிரி டெல்டாவில் புதிதாக 3 நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளதாக தமிழக பாஜக அண்ணாமலை தகவல் தெரிவித்துள்ளார்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் 3 நிலக்கரி சுரங்கம் கோரப்படுவதற்கான டெண்டர் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் டெல்டா விவசாயிகளையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த டெல்டா மக்களையுமே பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதில், டெல்டா என்பது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இருக்கிறது.
எனவே அந்த இடத்தில் நிலக்கரி சுங்கங்கள் அமைப்பதற்கோ, நிலக்கரி எடுப்பதற்கோ, விவசாயத்தை தடை செய்தற்கோ அதற்கான வாய்ப்பு கிடையாது. எனவே தமிழக அரசு ஒருபோதும் இதற்கு அனுமதிக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷியை சந்தித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மனு அளித்தார்.
டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் தமிழக மக்களின் நலன் கருதி நிலக்கரி சுரங்க ஏல பட்டியலில் இருந்து தமிழக பகுதிகள் நீக்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்திருந்ததார். இதனை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.
அதில், மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி நமது கோரிக்கையை ஏற்று தமிழகத்தின் டெல்டா பகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த மூன்று நிலக்கரி சுரங்கங்களுக்கான டெண்டரை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.