கர்நாடகாவில் இன்று முதல் ஜனவரி 2ம் தேதி வரை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படுகிறது என முதல்வர் எடியூரப்பா அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

இங்கிலாந்து உள்பட பல்வேறு உலக நாடுகளிலும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும், அது முந்தைய வைரசை விட மிகவும் ஆபத்தானது என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பிரதமர் மோடியே எச்சரிக்கை விடுத்துள்ளார். அதனால் அந்த வைரஸ் கர்நாடகத்தில் பரவுவதை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், கர்நாடகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிப்பது குறித்தும், பள்ளிகள் திறப்பு குறித்தும் உயர்மட்ட அதிகாரிகளுடன் முதல்வர் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர்;-  இன்று முதல் ஜனவரி 2ம் தேதி வரை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படுகிறது.

இதனால், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிராவைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.