தமிழ்நாட்டுக்கு வந்தா நாக்கில் தேன் தடவுவதும்!டெல்லிக்கு போனதும் நஞ்சா? அமித் ஷாவை எச்சரிக்கும் முதல்வர்.!

இந்தி மொழியை அனைவரும் எதிர்ப்பு இன்றி ஏற்க வேண்டும். ஏனென்றால் இந்தி மொழி உள்ளூர் மொழிக்கான போட்டி அல்ல என அமித் ஷா கூறியிருந்தார். 

CM Stalin warns Union Home Minister Amit Shah

மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் இந்திக்குக் கொத்தடிமை ஆக்கும் எதேச்சாதிகார முயற்சியாகும். இதைக் கேட்டு நடக்க தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக கூறியுள்ளார். டெல்லியில் அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற குழுவின் 38வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா;- உலகளவில் இந்தி மற்றும் நாட்டின் அனைத்து மொழிகளையும் பிரதமர் மோடி பிரபலபடுத்தி வருகிறார். இந்தி மொழியை அனைவரும் எதிர்ப்பு இன்றி ஏற்க வேண்டும். ஏனென்றால் இந்தி மொழி உள்ளூர் மொழிக்கான போட்டி அல்ல என கூறியிருந்தார். இந்நிலையில், அமித்ஷாவின் இந்தி குறித்த பேச்சுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க;- செந்தில் பாலாஜி கைது எல்லாம் சும்மா! அடுத்து இந்த அமைச்சருக்கு நடக்கபோவதை மட்டும் பாருங்கள்!அலறவிடும் அண்ணாமலை

CM Stalin warns Union Home Minister Amit Shahஇது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் இந்திக்குக் கொத்தடிமை ஆக்கும் எதேச்சாதிகார முயற்சியாகும். இதைக் கேட்டு நடக்க தமிழகம் தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல!

இதையும் படிங்க;- இனிமே தான் ஆட்டமே இருக்கு! மீண்டும் நாடாளுமன்றத்தில் கர்ஜிக்க போகும் ராகுல் காந்தி? எப்போது தெரியுமா?

CM Stalin warns Union Home Minister Amit Shah

தமிழகத்துக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும், டெல்லிக்குச் சென்றதும் நஞ்சைப் பரப்புவதும் பாஜகவின் பசப்பு அரசியல் என்பதை அனைவரும் அறிவோம். இந்தித் திணிப்பை இப்போது மேற்கு வங்கமும், கர்நாடகமும் எனப் பல மாநிலங்களும் கடுமையாக எதிர்க்கத் தொடங்கி இருப்பதை அமித் ஷா உணர வேண்டும். 1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என எச்சரிக்கிறேன்! என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios