ஆளுநருக்கு எதிரான தனது நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். 

ஆளுநருக்கு எதிரான தனது நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். முன்னதாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு காலநிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இதுக்குறித்து பாஜக அல்லாத மாநில முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார். மு.க.ஸ்டாலினின் இந்த தீர்மானத்திற்கு டெல்லி முதல்வர் பாராட்டு தெரிவித்திருந்த நிலையில் தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயனும் மு.க.ஸ்டாலினின் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தொகுதிக்குள் கால் வைக்கக் முடியாது! கர்நாடக காங். வேட்பாளருக்கு வேட்டு வைத்த நீதிமன்றம்!

Scroll to load tweet…

இதுக்குறித்த அவரது கடிதத்தில், ஆளுநர்களின் நடவடிக்கைக்கு எதிராக கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். மாநில அரசின் செயல்பாட்டை குறைக்கும் வகையில் ஆளுநர்கள் செயல்படுகிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்போம். ஆளுநருக்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற பரீசலிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கடற்கரையில் மீன் விற்கக் கூடாது; ஆனால் பேனா சிலையை வைக்கலாமா? சீமான் ஆவேசம்!!

Scroll to load tweet…

இதனை தொடர்ந்து தனக்கு ஆதரவு தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், எனது கடிதத்துக்கு உரிய பதிலையும், முழு ஆதரவையும் வழங்கிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நன்றி. தமிழ்நாடும் கேரளமும் எப்போதுமே மாநிலத் தன்னாட்சியைப் பாதிக்கும் எந்த முயற்சிக்கும் எதிரான தடுப்பரணாகத் திகழ்ந்து வந்துள்ளோம். ஆளுநர்களின் அதிகார வரம்பு மீறலுக்கு எதிரான நமது போராட்டத்திலும் வெற்றிபெறுவோம் என்று தெரிவித்துள்ளார்.