முதல்வர் ஸ்டாலினின் ஆளுமை கேள்விக்குறி! அதற்கு அமைச்சர்கள் சண்டையே உதாரணம்! திமுகவை ரவுண்ட் கட்டும் டிடிவி.!
அதிமுக கட்சி செயல்படாத நிலையில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி செய்த தவறால் சின்னம் இல்லாமல் கட்சி இல்லாமல் தற்போது நீதிமன்றத்தில் போராட்டம் நடத்தி வருகிறார். அதிமுக பற்றி பேசுவது தேவையற்றது.
திமுக ஒன்றரை ஆண்டுக்கால ஆட்சியில் மக்களிடம் வருத்தத்தை சம்பாதித்துள்ளது. அதை சரி செய்து கொள்ளவில்லை என்றால் இன்னும் மோசமான நிலையை சந்திப்பார்கள் என டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தனது 60வது வயது பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் குடும்பத்துடன் வழிபாடு செய்தனர். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி.தினகரன்;- தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஆளுமை கேள்விக்குறியாக உள்ளதால்தான் அமைச்சர்கள் இடையே சண்டை ஏற்படுகிறது. இதுவும் திராவிட மாடல் ஆட்சிக்கு ஒரு உதாரணம் என விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க;- தூங்கும் புலியை சீண்டி பார்க்காதீங்க தினகரன்! அதிமுகவை பற்றி பேச உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை!மாஃபா விளாசல்
மேலும், டிசம்பர் மாத இறுதியில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். மத்தியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்லுகின்றபோது கூட்டணி அமைக்கப்படும். வருகின்ற தேர்தலில் திமுகவை வீழ்த்தும் கூட்டணியில் அமமுக இருக்கும். அதிமுக கட்சி செயல்படாத நிலையில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி செய்த தவறால் சின்னம் இல்லாமல் கட்சி இல்லாமல் தற்போது நீதிமன்றத்தில் போராட்டம் நடத்தி வருகிறார். அதிமுக பற்றி பேசுவது தேவையற்றது.
இதையும் படிங்க;- தீய சக்தி திமுகவை வீழ்த்த அதிமுகவுடன் கூட்டணி வைக்க தயார்? ஒரே போடாக போட்ட டி.டி.வி. தினகரன்..!
அதிமுக ஆட்சியில் 11 மருத்துவக்கல்லூரிகள் கட்டியதில் ஊழல் நடந்திருப்பதற்கான முகாந்திரம் உள்ளதாக தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் பல துறைகளில் முறைகேடு நடைபெற்றதால்தான் திமுகவிற்கு மக்கள் வாய்ப்பளித்துள்ளனர். எந்த ஊழலாக இருந்தாலும் கத்திரிக்காய் முற்றினால் சந்தைக்கு வந்துதான் தீர வேண்டும்.
திமுக ஒன்றரை ஆண்டுக்கால ஆட்சியில் மக்களிடம் வருத்தத்தை சம்பாதித்துள்ளது. அதை சரி செய்து கொள்ளவில்லை என்றால் இன்னும் மோசமான நிலையை சந்திப்பார்கள். மழை வெள்ள பாதிப்பால் நிவாரணம் கிடைக்காமல் பொதுமக்கள் போராட்டம் நடத்துவது திமுக விடியல் ஆட்சியின் அவலம். மக்களை ஏமாற்றும் ஆட்சியாக திமுக அரசு உள்ளது என டிடிவி.தினகரன் கடுமையான விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க;- விரைவில் அதிமுக பொதுக்குழு.. வாய்ப்பு கிடைத்தால் டிடிவி.யை சந்திப்பேன்.. இபிஎஸ்ஐ அலறவிடும் ஓபிஎஸ்.!