நான் தான் அவருக்கு நிறைய நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. கோவை தங்கம் வீட்டில் துக்கம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்.!
கோவை வந்த முதல்வர் ஸ்டாலின் மறைந்த முன்னாள் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கத்தின் திருவருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தியோடு, அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்.
கோவை வந்த முதல்வர் ஸ்டாலின் மறைந்த முன்னாள் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கோவை தங்கத்தின் திருவருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தியோடு, அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்.
ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள, சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்வர் ஸ்டாலின் கோவை வந்தார். அப்போது, அவருக்கு கோவை விமான நிலையத்தில் பல ஆயிரக்கணக்கான திமுகவினர் மற்றும் பொதுமக்கள் மேளதாளம் முழங்க கழக கொடிகளை கையில் ஏந்தியவாறு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையும் படிங்க;- டெல்லிக்கு பறக்கும் ரிப்போர்ட்.. திமுகவினர் ஆளுநரை மாற்ற சொல்வதற்கு இதுதான் காரணம்.. அம்பலப்படுத்தும் வானதி.!
வரவேற்பின்போது, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில், மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக் Ex Mla, ரவி, தளபதி முருகேசன், அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிர்வாகிகளின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் இருந்து காரில் கோவை சாய்பாபா காலனிக்கு சென்றார். அங்கு மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். வீட்டில் இருந்த கோவை தங்கத்தின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தியோடு அவரது குடும்பத்தினரின் கோவை தங்கம் இறப்பு குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார். நேரில் வந்து ஆறுதல் கூறியதற்கு நன்றி எனக் கோவை தங்கம் குடும்பத்தினர் தெரிவித்தனர். அதற்கு, எனக்கு எதுக்கு நன்றி. நானே கோவை தங்கத்திற்கு நிறைய நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
பின்னர் அவர் அங்கிருந்து ஈரோடு மாவட்டத்திற்கு புறப்பட்டுச் சென்றார். தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலதுணைத்தலைவராக இருந்து கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுகவில் இணைந்தவர். கடந்த மாதம் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோவை தங்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க;- அரசியல் கருத்து சொல்ல வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்ல கூடாது.. தமிழ் மகன் உசேனுக்கு அமைச்சர் பதில்..!