Asianet News TamilAsianet News Tamil

சிறையில் உயிரிழந்த மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு நிவாரணம்... அறிவித்தார் மு.க.ஸ்டாலின்!!

நாமக்கல் கிளைச் சிறையில் உயிரிழந்த மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

cm stalin announced relief fund for the family of a disabled person who died in prison
Author
Tamilnadu, First Published Jan 17, 2022, 4:20 PM IST

நாமக்கல் கிளைச் சிறையில் உயிரிழந்த மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டம் கருப்பூரை சேர்ந்த பிரபாகரன் என்ற மாற்றுத்திறனாளிக்கு திருட்டு வழக்கில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் காவல் துறையினர் கடந்த 11 ஆம் தேதி கைது செய்து அந்த மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர். 12 ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அன்றைய தினம் இரவே அவர் உயிரிழந்தார். இதற்கு காவல்துறை துன்புறுத்தலே காரணம் எனக்கூறி சம்பந்தப்பட்ட காவல்துறை மீது கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி உறவினர்கள் கடந்த 13 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே நாமக்கல் மாவட்ட காவல் சூப்பிரண்ட் பரிந்துரைப்படி திருச்செங்கோடு தாலுகா முதல்நிலைக் காவலர் குழந்தைவேல் புதுச்சத்திரம் உதவி ஆய்வாளர் பூங்கொடி, சேந்தமங்கலம் உதவி ஆய்வாளர் சந்திரன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து சேலம்  சரக டிஐஜி பொறுப்பில் உள்ள சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார்.

cm stalin announced relief fund for the family of a disabled person who died in prison

இந்த நிலையில் நாமக்கல் கிளைச் சிறையில் உயிரிழந்த மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து வெளியான செய்திக்குறிப்பில், தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், கோட்டப்பட்டியைச் சேர்ந்த குமார் என்பவர், கடந்த நவம்பர் மாதம், நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் உள்ள மளிகைக் கடை உரிமையாளர் வீட்டில் தங்க நகைகளைத் திருடியதற்காக அண்மையில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், இவ்வழக்கில் தொடர்புடைய மாற்றுத் திறனாளி பிரபாகரன் மற்றும் அவரது மனைவி ஹம்சா ஆகியோர் சேந்தங்கலம் காவல்துறையினரால் கடந்த 11-1-2022 அன்று கைது செய்யப்பட்டு, நாமக்கல் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், 12-1-2022 அன்று மாற்றுத் திறனாளி பிரபாகரன் அவர்கள் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்ததன் அடிப்படையில், அவர் சிகிச்சைக்காக உடனடியாக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்பு தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனை நரம்பியல் துறையில், அனுமதிக்கப்பட்ட நிலையில், அன்று இரவு 11-40 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார். 

cm stalin announced relief fund for the family of a disabled person who died in prison

இது தொடர்பாக, சேலம் சரக டிஐஜி சேந்தமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் இருவரையும், தலைமைக் காவலர் ஒருவரையும் உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்துள்ளார். இந்த சம்பவத்தை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் வேதனையுற்று, உயிரிழந்த மாற்றுத் திறனாளி பிரபாகரன் குடும்பத்திற்கு, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு, அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிடவும், ஆணையிட்டுள்ளார். மேலும், மாற்றுத் திறனாளி பிரபாகரன் உயிரிழந்தது குறித்த வழக்கு விசாரணையைக் குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றிடவும் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios