தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்கிறதோ இல்லையோ... தேர்தல் முடிந்ததும் அதிரடி அரசியல் திருப்பங்கள் நிகழ்வது உறுதி. குறிப்பாக ஆளும் கட்சி அமைச்சர்கள் மாற்றம் நிகழப்போவது
நிச்சயம் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.

எப்பாடு பாட்டாவது ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என பல்வேறு அதிரடி வியூகங்களை வகுத்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. நடந்து முடிந்த 18 தொகுதி இடைத்தேர்தலிலும் நடைபெற உள்ள 4 தொகுதி இடைத்தேர்தலிலும் 10 தொகுதிக்கும் குறையாமல் வெற்றி பெற வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் எடப்பாடி களமாடி வருகிறார். ஆனால், சில அமைச்சர்கள் மட்டும் வெளிப்படையாக எடப்பாடி பழனிசாமியை வெளியில் புகழ்ந்து மறைமுகமாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு துதி பாடி வருகிறார்கள். 

22 தொகுதி இடைத்தேர்தலில், டி.டி.வி.தினகரன் அணிக்கு ஐந்து அமைச்சர்கள் தேர்தல் நிதி கொடுத்து இருக்கிறார்கள். இதனை ஸ்மெல் செய்த உளவுத்துறை முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் அந்தத் தகவலை கூறியிருக்கிறது. உச்சகட்ட கோபத்திற்கு ஆளான எடப்பாடி, தேர்தல் ரிசல்ட் வந்ததும், அந்த ஐந்து அமைச்சர்களின் பதவிகளை பிடுங்க முடிவு செய்துள்ளாராம். 

அதே போல் வரும் நாளை மறுநாள் நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்காக, அரவக்குறிச்சி தொகுதிக்கு அனுப்பப்பட்ட அமைச்சர், 'என்னிடம் பணம் இல்லை. கட்சி தலைமை  தந்தால் செலவு செய்கிறேன்’ என கையை விரித்து விட்டார். இதுவும் முதல்வர் காதுக்குப் போக, அந்த அமைச்சரிடம் பணம் கேட்க வேண்டாம். தலைமையில் இருந்தே செலவு செய்து கொள்ளுங்கள்’ தேர்தல் முடிந்த உடன் அவரை பார்த்துக் கொள்ளலாம் என கூறி இருக்கிறார். தேர்தல் அந்த ஐந்து அமைச்சர்களுடன் தேர்தலுக்கு பணம் கொடுக்க மறுத்த அமைச்சர் என மொத்தம் ஆறு அமைச்சர்களின் பதவிக்கு ஆபத்து என்கிறது அதிமுக தலைமை.