கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் பங்காரப்பாவை யாரும் மறந்திருக்க முடியாது, மிகவும் பிரபலமான அவரது மகன் குமார் பங்காரப்பா தற்போது பாஜக எம்எல்ஏவாக உள்ளார். அவர் குமாரசாமி மீது அடுக்கடுக்காக பல புகார்களை தெரிவித்துள்ளார்.

அவர்  பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் ‘மீடூ‘ இயக்கம் மூலம் தங்களுக்கு நேர்ந்த சம்பவங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். இது பெண்கள், ஆண்கள் என இருவருக்கும் பொருந்தும்.

இந்த ‘மீடூ‘ இயக்கத்தில் குமாரசாமி விரைவில் சிக்குவார். அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியே வந்து பேசுவார்கள் என அதிரடியாக புயலைக் கிளப்பினார்.

தொடர்ந்து அவர் பேசும்போது தேர்தல் பிரச்சாரத்துக்குக சிவமொக்காவுக்கு வரும்போது மட்டும் குமாரசாமி, பங்காரப்பாவின் பெயரை பயன்படுத்தி உணர்ச்சிப்பூர்வமாக பேசுகிறார். பங்காரப்பா காவிரி நீருக்காக போராடினார். ஆனால் அவரது பெயரை மண்டியா, ராமநகரில் ஏன் பயன்படுத்துவது இல்லை என கேள்வி எழுப்பினார்.

ராமநகரில், உங்கள் வீட்டு பிள்ளை என்று மனைவிக்காக குமாரசாமி பிரசாரம் செய்கிறார். அங்கு பங்காரப்பா என்று பெயரை சொல்லி ஓட்டு கேளுங்கள் பார்ப்போம் என சவால் விட்டார்


மாண்டியாவில் பேசும்போது கண்ணீர் விடும் குமாரசாமி, இங்கு வந்து பங்காரப்பாவுக்கு பாஜக  அநீதி இழைத்துவிட்டதாக கூறுகிறார். அவரது பேச்சு இனி இங்கு எடுபடாது என்றும் குமார் பங்காரப்பா தெரிவித்தார்.