முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு 40 நாட்களை கடந்துவிட்ட நிலையில், உடல்நிலை நன்கு தேறி விட்டதாக அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து தொடர்ந்து அறிக்கை மற்றும் பேட்டிகள் மூலமாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை பிரபல நாளிதழனா ‘தி இந்து’வில் முதலைமைச்சர் ஜெயலலிதா மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரதுஉடல் நிலையில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாயின. இதனால், அதிமுக தொண்டர்கள் இடையே பதற்றம் நிலவியது.

இந்த நிலையில் 2வது முறையாக வாய் திறந்துள்ளார். அப்பல்லோ மருத்துவமனை தலைவர் டக்டர் பிரதாப் சி.ரெட்டி. அதில் அவர் சில முக்கிய விஷயங்களை வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டு இருந்த நோய் தொற்று, 100 சதவீதம் சரியாகிவிட்டது. வழக்கமான உணவுகளை ஜெயலலிதா உட்கொண்டு வருகிறார். ஏற்கனவே சொன்னது போல், டிஸ்சார்ஜ் தேதி குறித்து ஜெயலலிதாவே முடிவெடுப்பார் என்றும், சாதாரண வார்டுக்கு செல்வதையும் அவரே முடிவு செய்வார் என்றும், அப்பல்லோ ரெட்டி தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்தார்.
தொலைக்காட்சியில் முகம் காட்டாமல் இருந்த அப்பல்லோ ரெட்டி, 2வது முறையாக ஊடகங்களுக்கு வெளிப்படையாக பேட்டி அளித்ததன் மூலம் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது.
