திண்டுக்கல்லில் நியாய விலை கடை மூலம் அரசு வழங்கும் பொங்கல் பரிசினை அதிமுகவினர் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் இரு தரப்புக்கும் இடையே முதல் ஏற்பட்டது.  தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை முன்னிட்டு தமிழக அரசு நியாயவிலை கார்டு வைத்திருப்பவர்களுக்கு பச்சரிசி, வெல்லம்,  திராட்சை, முந்திரி, கரும்பு மற்றும் 1000 ரூபாய் என இலவசமாக வழங்கப்படும் என அறிவித்து அதனை வழங்கி வருகிறது.   இதற்கான விழா கடந்த மாதம் சென்னையில் நடைபெற்றது இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு துவக்கி வைத்தார். 

ஆனால் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றதன் காரணமாக இந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது .  உள்ளாட்சி தேர்தல் முடிந்த நிலையில் இன்று 09.01.20 முதல் தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று  நியாய விலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசு மற்றும் ரூ 1000 பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது .  இந்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி 19, 20 வார்டுக்கு உட்பட்ட  கடை எண் 11,A நியாய விலை கடை பேருந்து நிலையம் அருகே உள்ள மெங்கில்ஸ் ரோட்டில் செயல்பட்டு வருகிறது.  இங்கு ஆளும் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் பொதுமக்களுக்கு அரசு வழங்கும் பொங்கல் பரிசு ரூ 1000 வழங்கினர்.

 

விரைவில் மாநகராட்சித் தேர்தல் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் அதிமுகவினர் பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் வகையில் அரசு இலவசமாக வழங்கும் பொங்கல் பரிசினை வழங்கக்கூடாது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்,  அப்போது அதிமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் பின்னர் இரு தரப்பினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது .  இதனையடுத்து அங்கிருந்து அதிமுகவினர் அங்கிருந்து பறப்புட்டு சென்றனர் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.