Asianet News TamilAsianet News Tamil

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை... சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தானில் வாழும் முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் மசோதா மக்களவையில் இன்று நிறைவேறியது. 

Citizenship Amendment Bill 2019 has been passed
Author
India, First Published Jan 8, 2019, 6:13 PM IST

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தானில் வாழும் முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் மசோதா மக்களவையில் இன்று நிறைவேறியது. 

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் வாழ்ந்துவரும் முஸ்லிமல்லாத பிற மதங்களை சேர்ந்த மக்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதாவுக்கு பாராளுமன்ற கூட்டுக்குழு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.Citizenship Amendment Bill 2019 has been passed

பாராளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவை அறிமுகம் செய்துவைத்து பேசிய மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் மேற்கண்ட நாடுகளில் சிறுபான்மையினத்தவர்களாக இருந்து, இந்தியாவுக்கு வந்து வாழ விரும்பும் இந்து, ஜைன, கிறிஸ்தவ, புத்த, பார்சி மதத்தினர் பயனடைவார்கள் என்று குறிப்பிட்டார். ஆனால், காங்கிரஸ் உள்பட சில எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.Citizenship Amendment Bill 2019 has been passed

இந்த மசோதாவுக்கு பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இதை பாராளுமன்ற தேர்வுக்குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக் கொள்ளாததால் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே மக்களவையில் குடியுரிமை மசோதா நிறைவேறியது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios