காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், ஊழியர்கள் என சினிமா துறையின் அனைத்து அங்கத்தினரும் அறவழி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அரசியல் கட்சியினர், விவசாயிகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திரைத்துறையினர் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர். நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், பெப்சி ஊழியர்கள் என திரைத்துறை சார்ந்த அனைத்து அங்கத்தினரும் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

நடிகர்கள் நாசர், விஜய், சூர்யா, பிரசாந்த், விஷால், சிவகுமார், கார்த்தி, சிவகார்த்திகேயன், ராஜேஷ் உள்ளிட்டோரும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், அமீர் உள்ளிட்ட பலரும் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். 9 மணிக்கு தொடங்கி போராட்டம் நடந்துவருகிறது. நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் 11 மணிக்கு கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது.