Asianet News TamilAsianet News Tamil

போர்த்துகீசியர்களின் சதி... இந்து ஆலயங்களை அழித்துவிட்டே தமிழகத்தில் சர்ச்சுகள் கட்டப்பட்டன..?

இந்து ஆலயங்களை அடியோடு மாற்றுவது அவர்களுக்கு பிடித்தமான ஒன்று. தமிழகத்தில் பிரிட்டிசாருக்கு முன்பே வந்து சென்னையின் கடற்கரையினை தொடக்கத்தில் கைபற்றியவர்கள் அவர்களே.

Churches were built in Tamil Nadu after the destruction of Hindu temples ..?
Author
Tamil Nadu, First Published Nov 9, 2021, 6:52 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

திருமாவளவன் சமீபத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் புத்தக ஆசிரியரின் கருத்தான திருவள்ளுவர் ஞானஸ்தானம் பெற்றவர், அவர் கிறிஸ்தவர் என கூறியதை மேற்கோள் காட்டி பேசினார். அவரது அந்தப் பேச்சு விவாதப் பொருளாக மாறியுள்ளது, அதாவது  " திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்"  என்ற தலைப்பில் பேராசிரியர் தெய்வநாயகம் என்பவர் எழுதிய நூல் வெளியீட்டு விழா கடந்த 5 தேதி சென்னையில் நடைபெற்றது, அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

 Churches were built in Tamil Nadu after the destruction of Hindu temples ..?

அப்போது கிறிஸ்தவராக இருந்துதான் திருக்குறளை வள்ளுவர் எழுதியுள்ளதாக, நூலாசிரியர் தெய்வநாயகம் எழுதியுள்ள கருத்து ஆய்வுக்குரியது என்றார். எழுத்தாளர் ஸ்டேன்லி ராஜன் தனது முகநூல் பக்கத்தில், ‘’சாந்தோம் ஆலயம் இந்து ஆலயத்தை அழித்து போர்த்துகீசியர்களால் கட்டபட்டிருக்கலாம் என்ற கருத்து ஆய்வுக்கு உட்பட்டது.

அவர்கள் கால் வைத்த இடமெல்லாம் இந்த வம்பினை செய்தார்கள், அக்காலத்தில் போர்த்துகீசிய நாடு போப்பாண்டவரின் நேரடி கட்டுபாட்டில் இருந்தது. அவரை மகிழ்விக்க அதிதீவிர மதப்பரப்பலை அந்நாட்டினர் தீவிரமாக செய்து கொண்டிருந்தனர். கள்ளிகோட்டையில் இதை செய்யும்பொழுது எழுந்த கலவரத்தில்தான் வாஸ்கோடகாமா கொல்லபட்டான். கோவா பக்கம் இந்த கோஷ்டியினை தொடக்கத்தில் வீரசிவாஜி அடக்கி வைத்தாலும் பின்னாளில் அந்த சிறிய பகுதியில்  தங்கள் கடற்படை பலத்தினால் தனி ராஜ்ஜியம் நடத்திய போர்த்துகீசியர் இந்த தயக்கமின்றி காரியங்களை செய்தனர். Churches were built in Tamil Nadu after the destruction of Hindu temples ..?

இந்து ஆலயங்களை அடியோடு மாற்றுவது அவர்களுக்கு பிடித்தமான ஒன்று. தமிழகத்தில் பிரிட்டிசாருக்கு முன்பே வந்து சென்னையின் கடற்கரையினை தொடக்கத்தில் கைபற்றியவர்கள் அவர்களே. அவர்கள் காலத்தில்தான் குபீரென "தாமஸ் மலை" "சாந்தோம்" எனும் சாந்தா தாமஸ் கல்லறை எல்லாம் உருவாயின. அதற்கு முன் அப்படி அடையாளமே இல்லை.

இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் மேற்காசியாவிலே வாழ்ந்து செத்த தாமஸ் கிபி 1500ம் ஆண்டு திடீரென வந்தது இப்படித்தான். (பின்னாளில் அங்கு திடீரென கண்டறியபட்ட கிறிஸ்தவ செப்பேடுகள், அதாவது அந்த இடம் கிறிஸ்தவ இடம் என திடீரென ஆவணமாக காட்டபட்ட செப்பேடுகள் பொய் என நிரூபிக்கபட்ட காட்சிகளெல்லாம் நடந்தன)Churches were built in Tamil Nadu after the destruction of Hindu temples ..?

வேளாங்கண்ணி முதல் தென்னக கடற்கரையெங்கும் இந்து ஆலயங்களை அவர்கள் கிறிஸ்தவ ஆலயங்களாக மாற்றிய பல விஷயம் நடந்தது உண்மை. தென் தமிழ்நாட்டிலும் சில இடங்களில் போர்த்துகீசியரின் இந்த வழமை உண்டு. ஆப்கானியர் கூட கோவில் இருந்தால் அதன் அருகில்  முதலில் மசூதிகட்டும் வழக்கம் உடையவர்கள். பின் மெல்ல மெல்ல எல்லாம் விழுங்குவார்கள். ஆனால் போர்த்துகீசியர் இந்து ஆலயங்களையே சர்ச்சாக மாற்றி அங்கு இந்துக்கள் இருந்த சுவடையே மறைப்பார்கள்.

இலங்கையின் வேளாங்கண்ணி என அழைக்கபடும் மடு மாதா ஆலயம் கூட இந்துக்களின் பத்தினி தெய்வ ஆலயம். அதாவது கண்ணகி ஆலயமாக இருந்தது என சமீபத்திய ஆய்வில் தெரியவந்தது. ஆம் இலங்கையில் அந்த கண்ணகி கோவில் மடுமாதா ஆலயமாக போர்ச்சுகல் ஆதிக்க காலத்தில் கட்டபட்டது. இப்படிபட்ட போர்த்துகீசியர் சாந்தோம் ஆலயத்தையும் இந்து ஆலயத்தை அழித்து கட்டியிருக்க வாய்ப்புகள் அதிகம். அந்த கோவில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது. காரணம் அந்த ஆலயம்தான் இங்கே எழும் எல்லா சிக்கலுக்கும் மூல காரணம். அதை பிடித்துகொண்டுதான் இந்தியாவுக்கு தோமா வந்தான், தோசை சுட்டான் என ஆளாளுக்கு இங்கே குழப்பத்தை விளைவிக்கின்றார்கள். Churches were built in Tamil Nadu after the destruction of Hindu temples ..?

அங்கிருந்துதான் இந்தியா தோமாவழி கிறிஸ்தவநாடு, வள்ளுவன் ஞானஸ்நானம் பெற்றான், வள்ளுவன் ஒரு கிறிஸ்தவன் எல்லா பொய்மூட்டைகளும் உற்பத்தியாகின்றன‌. மூலத்தையே பிடித்து உடைத்து, அது இந்துகோவிலை உடைத்து கட்டபட்ட ஆலயம் என்ற‌ உண்மையினை சொல்லிவிட்டால் இக்கோஷ்டிகள் வாயே திறக்க முடியாது’’ என அவர் தெரிவித்துள்ளார்

Follow Us:
Download App:
  • android
  • ios