மிசோரம் மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இதனால் அங்கு தமிழகத்தைப் போல் பாஜக காலூன்ற முடியவில்லை.

இதையடுத்து . கடந்தஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 39-ல் பாஜக போட்டியிட்டது. இதில்,‘சக்மா’ சமூகத்தவர் வாழும் ஒரு தொகுதியில் மட்டும் பாஜக வென்றது. மற்றபடி மக்களவைத்தேர்தலில் கூட அக்கட்சிக்கு 3-ஆவது இடம்தான் கிடைத்தது.

இந்நிலையில்தான் பாஜக  கிறிஸ்தவர்களுக்கு எதிரான கட்சி என்ற அடையாளத்தை மறைக்க, இளைஞரணி, மகளிரணியைப் போல, கிறிஸ்துவ மிஷினரி அணி’ ஒன்றை பாஜக உருவாக்கி இருக்கிறது. பாஜக தலைவர் அமித்ஷாவின் உத்தரவின் அடிப்படையில் இந்த அணி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மிஷினரிகள் அணிக்கு, மிசோ இன மக்கள் மத்தியில், செல்வாக்குள்ள லால்ஹிரியதெரங்கா என்பவரை தலைவராக பாஜக நியமித்துள்ளது.பாஜகவும் கிறிஸ்தவர் களுக்கு எதிரானதல்ல என்பதைக் காட்டவே இந்த அணி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், நாங்கள் மதச்சார்பற்ற சக்தி என்பதை மிசோரம் மக்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறோம் என்று பாஜக தலைவர் ஜேவி ஹூலுனா கூறியுள்ளார்.