நான் என்ன பைபாஸ் எம்.பியா? பைபாஸ் எம்.பி என்றால் பெண்ணை திருமணம் செய்து விட்டு ஒடியவர் என்று அர்த்தம். அது தெரியாமல் சின்னப்பையன் செந்தில் பாலாஜி உளறுகிறார்? பைபாஸ் சாலையை அமைத்த எம்.பி தான் நான்’’ என அதிமுக எம்.பி. தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

 

கரூர் அருகே, ஆத்துாரில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய தம்பிதுரை, ’’அரவக்குறிச்சி தொகுதிக்கு ஒரு சாபக்கேடு. ஏனென்றால் ஒரு எம்.எல்.ஏ இல்லாததால் தான். அப்படி ஒரு எம்.எல்.ஏ இருந்தும் கட்சி விட்டு கட்சி மாறி வரும் ஒரு ஆளை நம்பியதால் தான். இன்றுவரை எம்.எல்.ஏ இல்லாமல் தத்தளிக்கின்றது. விரைவில் அதிமுக சார்பில் மக்களே ஒரு எம்.எல்.ஏ வை தேர்ந்தெடுப்பீர்கள். தமிழகத்தில் கை சின்னத்திற்கு ஒட்டு போட்டால் கையளவு கூட காவிரி நீர் கிடைக்காது. 

கை சின்னம் ஜெயித்தால் வெற்றுக் கை தான் காண்பிப்பார்கள். இடைத்தேர்தலில், 18 தொகுதிகளிலும், அதிமுக, வெற்றி பெறும். இன்னும், இரண்டு ஆண்டுகளுக்கு, அதிமுக, ஆட்சி தொடரும். வட மாநிலங்களில் காங்., கட்சி யுடன், மாநில கட்சிகள் கூட்டணி வைக்கவில்லை. ஆனால், பா.ஜ.க., தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கூட்டணி வைத்துள்ளது. இதனால், பாஜ.க, தான், மீண்டும் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைக்கும்.

 

ராகுல் பிரதமராக முடியாது. பா.ஜ.க, ஆட்சியில், அதிமுக., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு, அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புண்டு. மாநிலத்தில், அதிமுக., ஆட்சி, மத்தியில், அதிமுக., ஆதரவில், பா.ஜ.க, ஆட்சி நடந்தால், பல நல்ல திட்டங்களை தமிழகத்துக்கு பெற்று வர முடியும்’’ என அவர் தெரிவித்தார்.