வைரமுத்து டாக்டர் பட்டம் வழங்க இருந்ததை ஒரே ஒரு ட்விட் போட்டு துடிதுடிக்க வைத்து விட்டார் சின்மயி. இந்நிலையில் சோகத்தை உள்வைத்துக் கொண்டு தனக்காக குரல் கொடுத்த அரசியல் பிரமுகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள வைரமுத்து அந்த லிஸ்டில் திருமாவளவன் பெயரை மறந்து விட்டார். 

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் கவிப்பேரரசு வைரமுத்துக்கு இலக்கியத்தில் டாக்டர் பட்டம் வழங்க இருந்தது. இந்நிலையில் பாடகி சின்மயி, ‘’9 பெண்கள் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியுள்ளனர். ஓராண்டாகியும் அவர் மீது நடவடிக்கை இல்லை. பாலியல் சர்ச்சைகளுக்காக அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறதா’என ட்விட் போட்டார். அடுத்து வைரமுத்துவுக்கு அளிக்கப்பட இருந்த டாக்டர் பட்டம் தடையானது. அந்த விழாவுக்கு தலைமை வகிக்க இருந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் விழாவை புறக்கணித்தார். 

இந்நிலையில், ’’எனக்காகக் குரல்கொடுத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாம் தமிழர் சீமான், முற்போக்கு எழுத்தாளர் அருணன் மற்றுமுள்ள  தமிழ் அமைப்பினர் அனைவருக்கும் நன்றி. இத்தனைபேர் துணையிருக்க எனக்கென்ன மனக்கவலை...?’’ என வைரமுத்து நன்றியை தெரிவித்தார்.

ஆனால் அந்த லிஸ்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பெயர் இல்லை. இதனை மனதில் வைத்து, கீழ்ஜாதிக்காரர் என்கிற ஒரே காரணத்துக்காக திருமாவளவ‌ன் பெயரை சொல்லாமல் விட்டுவிட்டார் வைரமுத்து என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.